Weight loss tips: இரவில் ‘இந்த’ உணவுகளை நிச்சயம் தவிர்க்கவும்..!!
இரவில் சில வகை உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே உடல் எடையை குறைக்கும் உங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகி விடும்
இரவில் சில வகை உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடும். எனவே உடல் எடையை குறைக்கும் உங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகி விடும்.
உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியுடன், உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது முக்கியம். இல்லையெனில் உங்கள் கடின உழைப்பு வீணாகிவிடும்.
எனவே, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிப்பதோடு, கொழுப்பு சேர்வதற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமான உணவுகளில் இருந்து விலகி இருப்பதும் முக்கியம். குறிப்பாக இரவில் சில உணவுகளை உட்கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக புத்திசாலித்தனமாகச் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். மேலும், பலவீனம் போன்ற சோர்வு எந்த பிரச்சனையையும் உங்களை அண்டாமல் இருக்கும்.
ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்
தூங்கும் முன் கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால், உங்கள் உடல் எடை குறைப்பு முயற்சிகள் வீணாகும். இரவில் தூங்கும் முன் இவற்றை சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது உடலில் கொழுப்பைக் சேர்க்கிறது.
1. இரவில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகள் தான் என்றாலும், இரவில் தூங்கும் முன் அவற்றை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனெனில், முட்டைகோஸில் இருக்கும் நார்ச்சத்து இரவு முழுவதும் செரிக்கப்படுவதால், தூக்கமும் பாதிக்கப்படுவதோடு, உணவு சரியாக ஜீரணிக்கப்படுவதில்லை. இரண்டுமே சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
2. தூங்கும் முன் அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
இரவில் அசைவம் சாப்பிடும் வழக்கம் இருந்தால், அதனை கைவிடுவது சிறந்தது. உடல் எடையை குறைக்க விரும்பினால், சிறிது காலத்திற்கு அந்த பழக்கத்தை நிறுத்துங்கள். ஏனெனில், முட்டைக்கோஸைப் போலவே அசைவ உணவும் தூங்கும் போது சரியாக ஜீரணிக்க முடியாது. இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
3. காபி
காபி குடிப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பும், ஆற்றலும் கிடைக்கும். ஆனால் இந்த ஆற்றலினால் எடையும் கூடும். ஏனெனில், இரவில் காபியில் இருக்கும் காஃபின் தூக்கத்தை பாதிக்கிறது . உடலின் வழக்கமான செயல்பாட்டை தொந்தரவு செய்யும். போதிய தூக்கமின்மையால் உடல் எடை அதிகரிக்கும். இதனால், காபி அருந்தாமல் இருப்பது நல்லது.
4. மது
நேரடியாகவும் மறைமுகமாகவும் மது பானம் அருந்துதல் உங்கள் எடையை அதிகரிக்கலாம். இதற்கு முதல் காரணம், தூங்கும் முன் மது அருந்துவதால் தூக்கம் சரியாக வராது. இதனால் உடல் எடை கூடும். அதே நேரத்தில், பெரும்பாலாமோர் ஆல்கஹால் உடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறார்கள், இது உங்கள் எடை இழப்பு முயற்சியை கெடுத்து விடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR