வேகமா உடல் எடை குறையணுமா? இதோ இருக்கு சூப்பரான வழி... இதை சாப்பிடுங்க போதும்
Weight Loss Tips: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
சப்ஜா விதைகள் மற்றும் பாலின் நன்மைகள்
உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு நீண்ட கடின உழைப்பு தேவை. இது தவிர, உங்கள் உணவு முறையை நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். மேலும் பசியைக் கட்டுப்படுத்தும் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும் பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதை செய்ய பல இயற்கையான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அப்படி ஒரு வழிதான் சப்ஜா விதைகள்.
சப்ஜா விதைகள்:
எடை குறைக்கும் முயற்சியில் சப்ஜா விதைகள் மிக உதவியாக இருக்கும். இந்த விதைகள் நார்ச்சத்து சேர்மங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் வயிற்றுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். எடை இழப்பு முயற்சியில் நமக்கு உதவக்கூடிய விதைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு சப்ஜா விதைகளை எப்படி உட்கொள்வது?
எடை இழப்புக்கு சப்ஜா விதைகளை பல வழிகளில் உட்கொள்ளலாம். இந்த விதைகளை பாலில் ஊறவைத்து உட்கொள்ளலாம், அல்லது பாலில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளலாம்.
எப்படி உட்கொள்வது?
- இதற்கு 1 கிளாஸ் பால் எடுத்து அதில் 1 தேக்கரண்டி சப்ஜா விதைகளை ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து இதை உட்கொள்ளலாம்.
- இது தவிர சூடான பாலில் இந்த விதகளை அப்படியே கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த ஸ்பெஷல் தண்ணீரை தினமும் குடியுங்கள்
சப்ஜா விதைகள் மற்றும் பாலின் நன்மைகள்:
1. கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது
சப்ஜா விதைகள் மற்றும் பால் இணைந்து நார்ச்சத்து கலவையை உருவாக்குகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இவை இரண்டும் ஒரு ஜெல் கலவையை உருவாக்கி உடலில் சேமித்துள்ள கொழுப்புடன் ஒட்டிக்கொள்கின்றன. இது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது. இதன் மூலம் கொழுப்புத் துகள்கள் மலத்துடன் சேர்ந்து உடலில் இருந்து வெளியேறுகிறது. இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
2. பசியைக் கட்டுப்படுத்துகிறது
பசியைக் கட்டுப்படுத்துவதில் சப்ஜா விதைகள் மற்றும் பாலின் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, அதை உட்கொள்வதன் மூலம் நமக்கு முழுமையான உணர்வு கிடைக்கிறது. மேலும் ஹார்மோன் ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது. இது தவிர, இது பசியையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த கலவை செரிமான அமைப்பை துரிதப்படுத்துகிறது. இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.
கூடுதல் தகவல்:
உடல் எடையை குறைக்க சப்ஜா விதைகளை போல சியா விதைகளும் மிக உதவியாக இருக்கும். எலுமிச்சை நீர் மற்றும் சியா விதைகளின் கலவை இதில் நமக்கு பயன் தரும். எலுமிச்சை மற்றும் சியா விதைகளை இரண்டு வழிகளில் உட்கொள்ளலாம். முதலில், எலுமிச்சை நீர் எடுத்து, அதில் சியா விதைகளை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் இந்த கலவையை அப்படியே விட்டு பின் தேனில் கலந்து உட்கொள்ளவும்.
எடை இழப்புக்கு எலுமிச்சை நீர் மற்றும் சியா விதைகளின் நன்மைகள்
1. ஃபேட் மெடபாலிக் விகிதத்தை அதிகரிக்கிறது
2. நார்ச்சத்து நிறைந்தது
3. வயிற்றை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நரை முடி பிரச்சனைக்கு குட்பை சொல்லனுமா? இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ