உடல் பருமனா? மோருடன் இதை கலந்து குடிங்க... ஓவர் வெயிட் பிரச்சனை 'நோ மோர்'

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக மக்கள் ஜிம், யோகா, டயட் மற்றும் இன்னும் பல முயற்சிகளை செய்கிறார்கள். 

உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு குறிப்பு பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /7

எடை அதிகரிப்பு இன்று பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாகும். ஏனெனில் பலரால் தாங்கள் உண்ணும் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.   

2 /7

பல சமயங்களில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து எடையை குறைத்து விடுகிறோம். ஆனால் கட்டுப்பாடு சற்று தளர்ந்தால் மீண்டும் நம் எடை அதிகரிக்கின்றது. இது நிலையான தீர்வு அல்ல.

3 /7

இயற்கையான தீர்வு: இந்த பிரச்சனைக்கு ஒரு இயற்கையான தீர்வு உள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் மோர் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம். மோரின் 3 வகையான ரெசிபிக்கள் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

4 /7

எலுமிச்சை சாறுடன் மோர்: எலுமிச்சை சாறு கொழுப்பை எரிக்க பெரிதும் உதவுகிறது. இந்த மோர் உங்கள் வயிற்றின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது. பின்னர் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமின்றி, வயிற்றை நிரம்பவும், கலோரிகளை எரிக்கவும் இந்த மோர் உதவுகிறது. இந்த மோர் தயாரிக்க, எலுமிச்சை மற்றும் கருப்பு உப்பை ஒன்றாக கலந்து மோரில் போட்டு, அதன் மேல் புதினா இலைகளை சேர்த்து, மோரை குடிக்கவும்.

5 /7

சியா விதை மோர்: சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை வயிற்றின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை துரிதப்படுத்தி வயிற்றில் ஈரப்பதம் மற்றும் ஜெல் போன்ற கலவையை உருவாக்குகிறது. இது உடலில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. இதை செய்ய மோரில் சியா விதைகளை சேர்க்கவும். அதன் பிறகு, இந்த மோரை உட்கொள்ளுங்கள்.

6 /7

மோர் உடன் ஆளி விதை தூள்: இதற்கு ஆளி விதையை வறுத்து அதன் பொடியை தயார் செய்து பின் மோரில் கலந்து குடிக்கவும். உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, கொழுப்பை ஜீரணிக்கவும் இது உதவுகிறது. ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எரிக்கிறது.

7 /7

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.