Weight Loss: காலையிலும் மாலையில் இப்படி சாப்பிட்டு பாருங்க, உடல் எடை சூப்பரா குறையும்
Weight Loss Tips: அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதானது அல்ல. ஏனென்றால் இதற்கு உடற்பயிற்சியுடன் சேர்த்து, நாம் உட்கொள்ளும் உணவிலும் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் உணவுகள்: உடல் எடையை குறைப்பது என்பது பலரும் முயலும் ஒரு காரியமாகும். பலருக்கு பல காரணங்களால் உடல் எடை மிக அதிகமாகி விடுகிறது. ஆனால், அதை மீண்டும் குறைத்து சரி செய்வது பிரம்ம பிரயத்னமாக இருக்கிறது.
அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதானது அல்ல. ஏனென்றால் இதற்கு உடற்பயிற்சியுடன் சேர்த்து, நாம் உட்கொள்ளும் உணவிலும் அதிக கவனமாக இருக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள், எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்ற நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். அதே போல் பிஸியான வாழ்க்கை முறையாலும் நம் ஆரோக்கியத்தை நாம் கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
இப்படிப்பட்ட நிலையில், இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க முடியும் என்றால், அதை விட பலருக்கு ஒரு நல்ல செய்தி வேறு இருக்க முடியாது. காலையிலும் இரவிலும் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், எளிய வழியில் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை சிற்றுண்டியில் இந்த குறிப்புகலை நினைவில் கொள்ளுங்கள்:
எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேமண்டும்
காலை சிற்றுண்டியில் கண்டிப்பாக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு தங்கிவிடுகிறது. அதனால், நாள் முழுவதும் உடலில் சோம்பலும், ஓய்வும் ஏற்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கும். இந்த உணவுகளில் பாதாம், ப்ரோக்கோலி போன்றவை அடங்கும்.
பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை காலை சிற்றுண்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் காலை சிற்றுண்டியில் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடல் எடையையும் கட்டுபடுத்தி வைத்திருக்கும். நீங்கள் உங்கள் உணவில் கீரை, கேரட் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
இரவு உணவுக்கான சில குறிப்புகள்
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இரவில் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக தயிர் சாப்பிட வேண்டும். இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது. இதில் புரதச்சத்தும் உள்ளது. இது தசைகளுக்கு பலம் அளிக்கிறது. இதனுடன், தயிரில் உள்ள நுண்ணூட்டச்சத்து செரிமானத்தை சரியாக வைத்து எடையையும் குறைக்கிறது.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் திடீரென அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
பாதாமை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
பல சமயங்களில், இரவில் திடீரென பசி எடுக்கும். சில காரணங்களால் தாமதமாக தூங்குபவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சிறிது பாதாம் சாப்பிடலாம். இது பசி என்னும் உணர்வுக்கு தீனி போட ஒரு ஆரோக்கியமான விருப்பமாக கருதப்படுகின்றது. பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் பாதாமில் காணப்படுகின்றன. மேலும் இதில் கலோரிகளும் குறைவாக உள்ளன.
முழு தானிய பிரெட்டுடன் பீநட் பட்டர்
இரவில் பசி எடுத்தால், பீநட் பட்ட தடவி 2 துண்டுகள் முழு தானிய பிரெட்டை சாப்பிடலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது எடை குறைக்கவும் உதவுகிறது.
வாழைப்பழமும் பலன் தரும்
வாழைப்பழம் சாப்பிடுவது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால் எடையைக் குறைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக, இதை சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி இருக்காது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த மூன்று ஜூஸை தினமும் குடித்தால் தைராய்டு குணமாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR