உடல் எடையை குறைப்பது எப்படி:  உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு, நமது சமையலறையில் குறைந்த கலோரி மற்றும் எடை இழப்புக்கு ஏற்ற சில உணவுகள் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் சில விஷயங்கள் சட்டென்று தேவை ஏற்படும்போது அருகில் இல்லாமல் இருப்பதால், பலரால் எடை குறைப்பு இலக்கை அடைய முடிவதில்லை. நமது சமையலறை பல வித உணவுப் பொருட்களால் நிறைந்துள்ளது. கொழுப்பு இழப்புக்கு, ஆரோக்கியமான மற்றும் எடை இழப்புக்கு ஏற்ற உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. ஆனால் சில வழிகளில் நாம் பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. இந்த சிக்கல்கள் நம் இலக்கை நாம் அடைவதில் தடையாக இருக்கின்றன. 


நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் உடல் உழைப்பு இல்லாத நிலையும் உடல் பருமனுக்கு மிகப்பெரிய காரணமாகும். சில பொருட்களை நம் சமையலறையில் எப்போதும் வைத்திருப்பது எடை இழப்பு முயற்சியில் நமக்கு உதவியாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


உடல் எடையை குறைக்க சமையலறையில் எந்தெந்த உணவுகளை வைத்திருக்க வேண்டும்?


ஓட்மீல் 


ஓட்ஸுடன் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து இதை இனிப்பாகவும் உட்கொள்ளலாம். அல்லது இனிப்பு இல்லாமல் உப்பின் சுவையோடு சாப்பிட விரும்பினால், தண்ணீர் விட்டு ஊற வைத்து, உப்பு, மசாலாக்கள் மற்றும் பிடித்த காய்கறிகளை சேர்த்து சாப்பிட்டால், இது சத்தானதாகவும் இருக்கும். உடல் எடையை குறைக்க பசியோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஓட்மீலில் உங்களுக்கு பிடித்த பழங்கள் அல்லது காய்கறிகளை சேர்த்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கும் பக்கவாதம் வருமா? அறிகுறிகள் இதுதான்


முட்டைகள்


இவை ஆண்டு முழுவதும் கிடைக்கும். இவற்றின் விலையும் அதிகம் கிடையாது. முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். உங்கள் எடையைக் குறைக்க நீங்கள் திட்டமிட்டால், முட்டையின் மஞ்சள் கருவை விட்டுவிட்டு, முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடுங்கள்.


பீட்ரூட்


இதை சாலட்டாகச் சாப்பிடலாம். பீட்ரூட் பராண்டாவும் உட்கொள்ளலாம். கய்கறியாக சமைத்தும் உண்ணலாம். அல்லது பீட்ரூட் ஜூசும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். பீட்ரூட் உடலுக்கு நல்ல ஆற்றலை அளிக்கின்றது. உங்கள் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு உங்கள் வொர்க்அவுட்டிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பானங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்கும்.


எடை இழப்புக்கு நீங்கள் உட்கொள்ளக்கூடிய பல உணவுகள் உள்ளன. ஆனால் இவற்றுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் எந்த பலனும் கிடைக்காது. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள் எப்போதும் குறைந்த கலோரி மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சி உங்கள் தினசரி வழக்கத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | கோடையில் அதிகரிக்கும் தோல் பிரச்சனை.. வீட்டு மருத்துவம் மூலம் சரிசெய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ