உடல் பருமன் குறைய... இந்த சிம்பிள் ஃபார்முலாவை கடைப்பிடிங்க போதும்!
உடல் பருமனை குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், நம்மால் முடிந்த சில எளிமையான, அதேசமயம் மிக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை இடைவிடாமல் கடைப்பிடித்தால் உடல் எடை குறைப்பது என்பது எளிதான விஷயம்தான்.
Weight Loss Tips: உடல் பருமனை குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், எல்லோரும் அஞ்சும் அளவிற்கு அது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. நம்மால் முடிந்த சில எளிமையான, அதேசமயம் மிக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை இடைவிடாமல் கடைப்பிடித்தால் உடல் எடை குறைப்பது என்பது எளிதான விஷயம்தான்.
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கியமான விஷயம் நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்றால் மிகையல்ல. ஒரு புறம் உடல் பருமன் பிரச்சனை பொதுவாக உள்ள அதே நேரத்தில், மறுபுறம் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீட்டு வைத்தியம் மூலம் எடையை குறைக்க (Weight Loss Tips) நினைக்கிறார்கள். சிலர் டயட்டிங் மூலம் எடையை குறைக்க நினைக்கிறார்கள். சிலர் உடற்பயிற்சியை கடுமையாக செய்து, அல்லது ஜிம் செல்வதன் மூலம் உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
மேலே கூறப்பட்டுள்ள யுத்திகளை கடைபிடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஆனால், எப்போதுமே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும், உடல் பருமனை குறைத்து உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கும் சில எளிய உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் நல்ல பலன் அடையலாம்.
புரதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த டயட் உணவு
உடல் எடையை கட்டுப்படுத்த உணவில் புரதம் நல்ல அளவில் இருக்க வேண்டும். புருவம் இல்லாமல் எடை இழப்பு என்பது சாத்தியமில்லை. புரதம் தசைகளை வலுப்படுத்தி, அதன் மூலம் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பும் அவசியம். இதற்கு முட்டை, சோயா உணவுகள், பன்னீர், உலர் பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும். குறிப்பாக காலை உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உணவை அவசரப்படாமல் மென்று சாப்பிட வேண்டும்
நமது பெரியோர்கள், அவசரப்படாமல் மெதுவாக சாப்பிடுவதை வலியுறுத்துவதை நம்மில் பல வீடுகளில் பார்த்திருப்போம். உணவை நன்றாக மென்று சுவைத்து சாப்பிடும்போது, உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து, செரிமானத்தை வலுப்படுத்துகிறது. மேலும், நமது வயிறு நிறைந்தது என்ற உணர்வும் நமக்கு கிடைக்கும். இதனால் உணவை முழுமையாக சுவைத்து அனுபவித்து உண்பது உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும்.
சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையை குறைக்க உதவும்
உடல் பிட்டாக இருக்க, கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. எளிமையான நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுதல், எளிமையான உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் செய்தாலே போதும். அதோடு, லிப்ட் எஸ்கலேட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாமல், அளவு படிக்கட்டுகளை பயன்படுத்துவது மிக நல்லது. படிகள் ஏறுவது, உடல் எடையை குறைப்பதோடு மட்டுமின்றி, மிக ஆரோக்கியமான பயிற்சி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?
டயட்டில் போதுமான அளவு நார்ச்சத்து அவசியம்
புரதம் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றோடு மட்டுமின்றி, உணவில் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் நிச்சயம் தேவை. இவை செரிமானத்தை வலுப்படுத்துகிறது. செரிமானம் சரியாக இருந்தால் தான், உடல் எடை குறைப்பு என்பது சாத்தியம். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். இதற்கு உணவில் நார்ச்சத்து மிக்க பழங்கள் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
போதுமான தண்ணீர் மற்றும் போதுமான தூக்கம்
உடலுக்கு நீர் சத்து இன்றியமையாதது. எனவே, நிறைய தண்ணீர் குடிப்பதால், செரிமானம் சிறப்பாக இருக்கும் என்பதோடு, வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும். அதோடு, போதுமான தூக்கம் இல்லை என்றால் உடல் பருமன் ஏற்பட அதுவே முக்கிய காரணமாகிவிடும். தூக்கமின்மை பசி மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குறைந்தது 7 மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு தேவை.
மேலும் படிக்க - அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ