இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வயதினர் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அதிக உடல் எடை பிரச்சனையினால் சிரமப்படுகின்றனர். தற்போதைய வாழ்க்கை முறை தான் அதற்கு முக்கிய காரணம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களால் உடல் எடையைக் குறைக்க முடிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துரிதமான இந்த வாழ்க்கை முறையில், தொப்பை கொழுப்பைக் கரைக்க, எடையைக் குறைக்க உதவும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது உங்கள் எடை இழக்க நிச்சயம் உதவும்கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அந்த 5 பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.


பாதாம்: 


இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் உள்ளது, ஒரு முறை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது, அதனால்தான் உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். பாதாம் பருப்பில் கலோரிகளும் மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.



பெர்ரி பழங்கள்: 


இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக காணப்படுகிறது. மேலும், பெர்ரியில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே, அதிகரித்து வரும் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி காரணமாக, தொப்பை கொழுப்பு வேகமாக கரையும்.


பச்சை இலை காய்கறிகள்: 


பச்சை இலை காய்கறிகள் எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.  இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உங்கள் தினசரி உணவில் கீரை, பீன்ஸ், பட்டாணி அல்லது ப்ரோக்கோலியை சேர்த்துக்கொள்ளலாம்.



ஓட்ஸ்: 


இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் கொழுப்பு இல்லாத உணவாகும். இதை தினமும் காலை உணவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவதால், ஒருவருக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் உடல் பருமன் குறையத் தொடங்குகிறது.


டோஃபு பன்னீர்: 


இது புரதத்தின் வளமான மூலமாகும், இது தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் இடுப்பு மற்றும் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்கும். உண்மையில், டோஃபுவில் குறைவான கலோரிகள் உள்லது. ஆனால், பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. அதனால் எடை யை கட்டுப்படுத்தும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)