உடல் எடையை குறைக்கும் பானம்: உலகம் முழுவதும் 40 சதவீதம் பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவையாகும். ஒவ்வொரு ஆண்டையும் போலவே 2023 ஆம் ஆண்டின் துவக்கத்திலும், பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை ஆண்டின் இலக்காக வைத்துள்ளனர். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடைய குறைக்க பல உணவுகள் மற்றும் பானங்கள் உதவும். உதாரணமாக, பானங்களில், புரோட்டீன் ஷேக்குகள், ஸ்மூதிகள், பழச்சாறுகள், தேநீர் போன்றவை உடல் எடையைக் குறைக்க பல வழிகளில் பயன் தரும் என கூறப்படுகின்றது. மேலும், பல பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகளில் வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் எடை இழப்புக்கு உதவும் பிற கலவைகள் நிறைந்துள்ளன.


ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சரியான ஊட்டச்சத்துக்களை அறிந்து அவற்றை சேர்த்து உட்கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு சிறப்பு வகை பானம் உங்கள் எடை இழப்புக்கு உதவும். எலுமிச்சம்பழம் மற்றும் சியா விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பயனுள்ள எடை இழப்பு பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இதை தினமும் காலையில் உட்கொள்ளலாம்.


இந்த சிறப்பு பானத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்: 


- 2 டீஸ்பூன் சியா விதைகள்
- 1/2 எலுமிச்சையின் சாறு
- ஒரு கிளாஸ் சூடான தண்ணீர்
- 1 டீஸ்பூன் தேன்


மேலும் படிக்க | Women Health: பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்; இதை செய்தால் எளிதாக வெல்லலாம் 


இந்த பானத்தை தயாரிப்பது எப்படி


சியா விதைகளை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த விதைகளை ஒரு கிளாஸில் போட்டு, அதனுடன் அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் கிளாஸில் சூடான தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்றாகக் கலந்து குடிக்கவும். இந்த பானத்தின் முழு பலனையும் பெற, இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.


எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளது. இது கொழுப்பு செல்களில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது. 


மேலும், சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமற்ற பிற உணவுகளை உண்பது தவிர்க்கப்படுகின்றது. இந்த வகையில், பல ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பானம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சர்க்கரையின் அளவு அதிகரித்து இருக்கலாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ