Weight Loss Tips: தொப்பையை வேகமாக கரைக்கும் ‘மேஜிக்’ட்ரிங்க்!
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரித்துள்ளதோடு, தொப்பை அதிகரித்து உடல் தோற்றத்தை கெடுக்கிறது.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்களுக்கு உடல் எடை அதிகரித்துள்ளதோடு, தொப்பை அதிகரித்து உடல் தோற்றத்தை கெடுக்கிறது. அதோடு, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
தொப்பை, தொந்தி என்று சொல்லப்படும் இந்த வயிற்று கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். இது தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவும் என்பதோடு, உடல் எடையும் வேகமாக குறையும். கொழுப்பை கரைக்கும் மேஜிக் பானம் வெல்லம் மற்றும் எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
எடை இழப்புக்கான மேஜிக் பானம்
உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் வழக்கமான உடற்பயிற்சி சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நேரமின்மையால் சிலர் உடற்பயிற்சி செய்ய முடியாத சூழ்நிலை இருப்பவர்களுக்கு இந்த ஆயுர்வேத பானம் பெரிதும் உதவும்.
மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!
எலுமிச்சம்பழம் - வெல்லம் கலந்த பானத்தை தயாரிக்கும் விதம்:
1. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை பொடியாக்கி கலக்கவும்.
2. இப்போது அதை நன்றாக கலந்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
3. இரண்டையும் மீண்டும் ஒருமுறை கலந்த பிறகு, உங்கள் பானம் தயாராகிவிடும்.
4. வெற்று வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் தொப்பை கரையும்.
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
இந்த பானம் மேஜிக்காக செயல்படும் காரணம்
வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது என்பதால், இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள். வெல்லத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. எடையைக் குறைக்கும் முயற்சியில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எடை குறைப்பில் எலுமிச்சை, வெல்லம்
ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் அப்ரார் முல்தானி ஜீ நியூஸிடம் கூறுகையில், எலுமிச்சை உடலை சுத்தப்படுத்துகிறது என்பதோடு, எடை இழப்பு செயல்முறையை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எடையை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. வெல்லம் மற்றும் எலுமிச்சை செரிமானம் மற்றும் சுவாச அமைப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என்றார்.
மேலும் படிக்க | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR