உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் நாம் அனைவரும் சிரமப்படுகிறோம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் உடல் எடையை குறைக்க நாம் டயட் செய்து பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால் இப்போது நீங்கள் கடினமான உடற்பயிற்சி மாற்றும் டயட் இல்லாமல் கூட உங்கள் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆம், உங்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்கக்கூடிய சில முக்கிய வழிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், அதை பின்பற்றுவாதன் மூலம் நீங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும். எப்படி என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முயர்ச்சிகளால் உங்கள் உடல் எடையை ஐஸ் போல் கரையும்


சிறிய அளவில் சரியான இடைவெளியில் உணவை உண்ணவும்: கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கவனமுடன் சாப்பிடுங்கள், மேலும் உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில், அலைபேசி, தொலைபேசி போன்ற கவனத்தை சிதறடிக்கும் வேலைகளைச் செய்யும்போது உணவு உண்பதைத் தவிர்க்கவும். இதற்குக் காரணம், டி.வி., ஃபோன் விளையாடும் போது உணவு உண்ணால் ​​உங்கள் டயட்டை விட நீங்கள் அதிகளவு சாப்பிட நேரிடும். எனவே, டிவி பார்க்கும் போதோ அல்லது போனை இயக்கும்போதோ உணவு உண்பதைத் தவிர்க்க முயர்ச்சிக்கவும்.


மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது



உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்: உடல் எடையை குறைக்க உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கில், நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இது தவிர சூப், ஜூஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், அது மிகவும் பயனுள்ள ரிசல்ட்டை தரும்.


மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்


உணவில் புரதச் சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்- பெரும்பாலான மக்களின் உணவில் புரதம் இருப்பதில்லை. ஆனால் ஆரோக்கியமாக இருக்க, உணவில் புரதம் இருப்பது மிகவும் அவசியம். புரோட்டீன்கள் நம் வயிற்றை நீண்ட நேரம் நிறைத்து வைத்திருக்கும்.   


உடற்பயிற்சி: உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நடக்கலாம், நடக்கும்போது உங்கள் கலோரிகளை எளிதில் கரைக்க, இதற்காக நீங்கள் தினமும் காலையிலும் மாலையிலும் நடைப்பயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR