Weight Loss Tips: உடல் பருமனை ஓட ஓட விரட்ட.. பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க
Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நம் உடல் டையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது தவிர உடல் எடை அதிகரிப்பதால் இன்னும் பல நோய்களும் நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகின்றன. ஆகையால், உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். எடையை குறைகக் பெரும்பாலும் மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், சிலர் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் இது சாத்தியமில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நம் உடல் டையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்கும் பப்பாளி (Papaya For Weight Loss)
பப்பாளி குறைந்த கலோரி பழமாகும். இதில் அதிக தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. விரைவில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளி பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு அதிக சத்தும் இதில் உள்ளது. ஒருவர் தனது அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், தினமும் பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது அவரது அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் பருமனையும் வேகமாகக் குறைக்கும். ஆம், பப்பாளி உடல் எடையை குறைக்கும் ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது. பப்பாளியின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம்.
பப்பாளி (Papaya) மிகவும் குறைந்த கலோரி கொண்ட பழம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும், வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக பயனற்ற, ஆரோக்கியமற்ற பொருட்களை ஆங்காங்கே சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. கலோரிகள் குறைவாக இருப்பதுடன், பல வைட்டமின்களும் பப்பாளியில் இருக்கின்றன. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | இரவு உணவிற்குப் பின் செய்யும் இந்தத் தவறுகளால் உடல் எடை அதிகரிக்கும்
பப்பாளி நீர்ச்சத்து நிறைந்த பழமாகும். 100 கிராம் பப்பாளியில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது. மேலும் இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலில் உள்ள நச்சுகளை சிறந்த முறையில் நீக்குகிறது.
இது தவிர, பப்பாளி உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது. இது உடலின் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும் இது விரைவான கொழுப்பை அனுமதிக்காது.
பப்பாளி பழச்சாறு செய்து குடிக்கவும்
உடல் எடையை குறைக்க (Weight Loss Tips) வேண்டும் என்றால் பப்பாளி பழச்சாறு செய்து குடிக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பை குறைத்து, உடற்தகுதியை மேம்படுத்துகின்றன. பப்பாளியை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
காலை உணவில் பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
உடல் எடையை குறைக்க பப்பாளியை காலை உணவில் சேர்க்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை அளித்து, கூடுதல் கொழுப்பை குறைக்கிறது. பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதனுடன் கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து காலை உணவாகவும் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெண்களுக்கு அதிலும் கர்பிணிகளுக்கு ஏன் மெக்னீசியம் அதிகம் தேவை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ