என்ன செய்தாலும் உடல் எடை குறையலையா; காலையில் இந்த மூன்றை செய்யுங்கள் போதும்
உடல் எடையைக் குறைக்கவும் ஃபிட்டாக இருக்க வாழ்க்கைமுறையில் சில விஷயங்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். சில காலை பழக்கங்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கினால், உடல் எடை குறைப்பதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
உங்கள் நாளை எப்படி தொடங்குகிறீர்கள் என்பது உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, உடல் எடையை குறைப்பதாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். சில காலை பழக்கங்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கினால், உடல் எடை குறைப்பதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
சரிவிகித உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட வாழ்க்கைப் பழக்கங்களைக் கைவிடுதல் ஆகியவை ஆரோக்கியமாக வாழ உதவும். காலைப் பழக்கத்தில் சில நல்ல பழக்கங்களைச் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, மனநலமும் பெருகும். மிகவும் நன்மை பயக்கும். எந்தெந்த பழக்கங்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்:
உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் காலை பழக்கங்கள்
1. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாளைத் தொடங்குங்கள்
காலையில் எழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், உங்கள் உடலில் நோய்கள் இருந்தால் அதனை குணமடைய வேண்டும் என்றும், ஆரோக்கியமான உடல் வேண்டும் என்ற எண்ணத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இதனுடன், உடல் எடையை குறைக்க, நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று உறுதியாக இருக்கவும். இது உடல் எடையை குறைக்க உதவும்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
2. ஆழ்ந்த சுவாசம்
ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம், வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்பட்டு, எடையைக் குறைக்க உதவுகிறது. இது தொப்பையை குறைக்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி இந்த பயிற்சியை செய்வதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
3. ஸ்ரெச்சிங் மற்றும் நடைபயிற்சி
தினமும் காலையில் சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வதும், நடைப்பயிற்சி செய்வதும் உடல் எடையை குறைக்கும். இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும், நடைபயிற்சி ஒரு சிறந்த உடற்பயிற்சி. இதனால் உடல் முழுவதும் பலன் பெறுவதுடன் எடையும் குறைகிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR