அடிவயிற்றில் தொங்கும் தொப்பை குறையுமா? இந்த மசாலாவை உட்கொள்ளுங்கள்
Fat Control Tips: தற்போது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் அதிக அளவில் குண்டாகிவிடுகின்றனர். சிலர் ஜிம்மிற்குச் சென்றாலும், தொப்பையைக் குறைக்க முடியவில்லை. இந்த பிரச்சனையை போக்க ஒரு மசாலா பொருள் உள்ளது, அதை உட்கொள்வதன் மூலம் நீங்கள் தீர்வு பெறலாம்.
உடல் எடையை குறைப்பது எப்படி: தற்போது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக, நமது உடல்நிலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றின் மாற்றத்தை நம்மால் தெளிவாக காண முடிகிறது. உணவில் கவனம் செலுத்தாததால் மக்கள் உடல் எடை கூடிவிடுகின்றனர். தொப்பையை அதிகரிப்பு பிரச்சனையால் நீங்களும் போராடிக் கொண்டிருந்தால், அதைச் சமாளிக்க இலவங்கப்பட்டை மசாலா தொடர்பான சில வைத்தியங்களை இன்று நாம் காண உள்ளோம். இந்த மசாலா எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டையும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இலவங்கப்பட்டையில் பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே நீங்கள் இலவங்கப்பட்டையுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற பல நோய்களை தடுக்க உதவும்.
மேலும் படிக்க | குளிர்ச்சியான இந்த 5 பானங்களை நீரழிவு நோயாளிகள் குடிக்கலாம்!
பக்க விளைவுகள் இல்லை
உடல் பருமன் அதிகரிக்கும் பிரச்சனையுடன் போராடுபவர்களுக்கு, தேன் மற்றும் இலவங்கப்பட்டை சாப்பிடுவது அதிசயங்களைச் செய்யும். இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை படிப்படியாக குறைய ஆரம்பித்து உடல் மெலிதாக மாறும். இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இந்த ஆயுர்வேத செய்முறையில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதுதான்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை தேநீர் தயாரிப்பது எப்படி
இலவங்கப்பட்டை மற்றும் தேன் தேநீர் (Honey and Cinnamon Remedy for Weight Loss) தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் நான்கில் ஒரு பங்கு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை போட்டு கலக்கவும். அதன் பிறகு, அந்த தண்ணீரை 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அந்த தண்ணீரை ஒரு கப்பில் போட்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலக்கவும். அதன் பிறகு குடிக்கவும். இந்த தேநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதிக பலன் கிடைக்கும். மேலும் தினமும் குடித்து வந்தால் நீங்கள் சிறப்பான முடிவுகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடிக்கடி வயிறு வலிக்கிறதா? வயிற்று புற்றுநோயாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ