உடல் எடையை குறைக்கும் பழக்கவழக்கம்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்கவே விரும்புகின்றனர். அதே சமயம் பிட்டாக இருக்க ஜிம்மில் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும் சிலருக்கு தொப்பை கொழுப்பு குறைவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, இதற்கு மாறாக, உங்கள் தொப்பையை எளிதில் குறைக்கக்கூடிய சில பழக்கங்களை பின்பற்றினால், டக்குனு உடல் எடை குறையத் தொங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேர பிற காரணங்களை விட முக்கியமாக கூறப்படுவது உங்களுடைய வாழ்க்கை முறை. அதிலும் அதிக கொழுப்புள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுப்பவருக்கு கீழ் வயிற்றில் கொழுப்பு அதிகமாக சேரும். சிலருக்கு மரபணு காரணமாகவும் கீழ் வயிற்றில் அதிக கொழுப்பு சேருவதுண்டு.மற்ற பாகங்களுக்கு நீங்கள் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட மிக கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்தால் மட்டுமே கீழ் வயிற்று கொழுப்பினை கரைக்க முடியும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!


உடல் எடையை குறைக்க 15 வழிகள்


1. உடல் எடையை குறைக்க டயட் மட்டும் போதாது, இதற்கு சமச்சீரான உணவை கடைபிடிப்பது அவசியம்.
2. உங்கள் உணவில் அதிக புரதம் உள்ள பொருட்களை நீங்கள் சேர்க்க வேண்டும்.
3. எண்ணெய் உணவுகளை உண்ணும் போக்கு இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது, ஆனால் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
4. எண்ணெய் உணவுக்கு பதிலாக வேகவைத்த உணவை உண்ண வேண்டும்.
5. மது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கானது, அதிலிருந்து எப்போதும் விலகி இருங்கள்
6. குளிர் பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்கவும்
7. சர்க்கரை அல்லது இனிப்பு பொருட்கள் உடல் பருமனை அதிகரிக்கின்றன, அதிலிருந்து விலகி இருங்கள்
8. உலர் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், அது நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது.
9. பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடத் தொடங்குங்கள், ஏனெனில் அதில் கலோரிகள் காணப்படுகின்றன.
10. தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது அவசியம்.
11. தண்ணீர் குடிக்க தயங்க வேண்டாம், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
12. நீங்கள் சிறந்த முடிவுகளை விரும்பினால், வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்
13. க்ரீன் டீ அல்லது மூலிகை டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
14. காலை உணவாக ஓட்ஸ் மற்றும் கினோவா சாப்பிடுங்கள்
15. தினசரி உடற்பயிற்சியை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்


இந்த நிலையில் எடை இழப்புக்கு பல முயற்சிகள் உள்ளன. ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால் எந்த பலனும் கிடைக்காது. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள் எப்போதும் குறைந்த கலோரி மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சி உங்கள் தினசரி வழக்கத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ