Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சீரான உடை எடையுடன் சிக்குனு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2023, 12:02 AM IST
  • எடை இழப்பை அதிகரிப்பதற்கான மிகவும் இயற்கையான வழி செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதாகும்.
  • எடையைக் கட்டுப்படுத்த உதவும் சில சிறந்த மசாலாப் பொருட்கள்.
  • இலவங்கபட்டை மசாலா எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்! title=

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சீரான உடை எடையுடன் சிக்குனு இருக்க வேண்டும் என நாம் அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது, உடல் எடையை குறைக்க நாம் நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும். ஆனால், எளிமையாக உங்களின் உடல் எடையை குறைக்கும் வழிமுறையை பின்ன்பற்றினாலஏ உடல் எடையை குறைக்கலாம். நமது உடல் எடையை குறைக்க நமது சமையல் அறையில் இருக்கும் மசாலா பொருட்கள் மட்டுமே போதும் என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...

பல நூற்றாண்டுகளாக, இந்தியா அதன் மருத்துவ குணம் நிறைந்த மசாலாப் பொருட்களால் உலக நாடுகள் பலவற்றை ஈர்த்துள்ளது. அதன் சுவையை வழங்குவதோடு, அவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகின்றன. உடல் எடை குறைய இவை பெரிதும் உதவுவதோடு, ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியையும் இவை அதிகரிக்கின்றன. உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும் சில சிறந்த மசாலாப் பொருட்களைப் பற்றி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

இலவங்கப்பட்டை

மரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இலவங்கபட்டை மசாலா எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. அடிக்கடி பசி ஏற்படுவதையும் அடக்குகிறது. இது இரத்தத்தில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் வலியையும் குறைக்கிறது. மேலும், குமட்டலைப் போக்கவும் இது நன்மை பயக்கும். காலையில் உங்கள் உடலை டிடாக்ஸ் செய்ய தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு கிளாஸ் சூடான பாலுடன் இதனை கலந்து குடிக்கலாம். 

மேலும் படிக்க | Diabetes: கணையத்தில் இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் முளை கட்டிய வெந்தயம்!

மஞ்சள்

அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மஞ்சள் செரிமானத்தை அதிகரிக்கிறது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை நீக்குகிறது. நீங்கள் மஞ்சள் தேநீர், மஞ்சள் பால், ஆகியவற்றை அருந்தலாம். உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

வெந்தயம்

வெந்தயம் இயற்கை இழைகளைக் கொண்டுள்ளது. பசியை அடக்க உதவுகிறது. வெந்தயத்தால் கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உனர்வை அளிக்கிறது. இது அதிகப்படியான உணவை உண்பதை தடுக்கிறது. இது செரிமான அமைப்பை ஃப்ரீ-ரேடிக்கல்களின் சேதங்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதனை சாப்பிடுவது நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எடை இழப்பை அதிகரிப்பதற்கான மிகவும் இயற்கையான வழி செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதாகும்.

கருமிளகு

கருமிளகில் உள்ள பைபரின் கூறு உடலில் கொழுப்பு சேருவதை தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலை தயார் செய்கிறது. இந்த மசாலா உடல் ஊட்டச்சத்துக்களை சிறந்த முறையில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. கருப்பு மிளகு தேநீர் உடல் பருமனை நிர்வகிப்பதில் அதிசயங்களை செய்கிறது எனலாம்.

பெருஞ்சீரகம்

வைட்டமின்கள் ஏ, டி மற்றும் சி ஆகியவை நிறைந்த பெருஞ்சீரகம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், இயற்கையான டையூரிடிக் மருந்தாகவும் இருப்பதால், உடலில் இருந்து தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் நாளை ஒரு கிளாஸ் ஊறவைத்த பெருஞ்சீரகம் நீரில் தொடங்க முயற்சி செய்யுங்கள். 

ஏலக்காய் 

ஏலக்காய் உணவிற்கு நறுமணம் வழங்குகிறது. இந்த நறுமண டையூரிடிக் மசாலா செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. உடலில் உள்ள கொழுப்பை எரிக்க திறமையாக உதவுகிறது. உங்கள் காலை தேநீர் மற்றும் உங்கள் கிரீ டீயில் ஏலக்காயை சேர்க்கலாம். உண்மையில், சிறந்த பலன்களை பெற நீங்கள் ஏலக்காயின் 3-4 காய்களை வெறுமனே வாயில் போட்டு மெல்லலாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News