காபி பிரியர்களே உஷார்.... ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம் தெரியுமா?
Benefits and Side Effects of Coffee: அனைத்து மனநிலைக்கும், அனைத்து பருவத்துற்கும் காபி துணையாகிறது. ஆனால் அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு. சுவையான இந்த பானத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Benefits and Side Effects of Coffee: காபி பிரியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். காபி பலருக்கு மிக பிடித்தமான பானமாக உள்ளது. இதன் சுவையும் மணமும் மக்களை கட்டிப்போடுகின்றன என்றே கூறலாம். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான பானமாக இது உள்ளது.
காலையில் எழுவது முதல் சோர்வு நீங்கும் வரை, அனைத்து மனநிலைக்கும், அனைத்து பருவத்துற்கும் காபி துணையாகிறது. ஆனால் அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு. சுவையான இந்த பானத்தை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. காபியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால், அதிகமாக காபி குடிப்பதால் சோர்வு, கவலை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பலவித உடல்நல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
காபியில் உள்ள கஃபைன்
காபியில் கஃபைன் உள்ளது. இது மூளையின் செயலாக்கத்திற்கு உதவுவதோடு செறிவு மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. ஆனால், எதுவுமே அளவுக்கு அதிகமானால் நஞ்சுதான். காபியின் நன்மைகளையும் அதிகமாக காபி குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இங்கே காணலாம்.
காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Health Benefits of Coffee)
- நீரிழிவு நோயின் ஆபத்து குறையும்: காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- மூளை ஆரோக்கியம்: காபி குடிப்பதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்.
- உடல் எடையை குறைக்க உதவும்: காபி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க இது உதவுகிறது.
- மனச்சோர்வின் அபாயம் குறையும்: காபி குடிப்பது மனச்சோர்வின் அபாயத்தைக் குறைப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகமாக காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் (Side Effects of Coffee)
- காபி இதய துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
- அதிகமாக காபி குடிப்பது பதற்றம் மற்றும் அச்சத்தை அதிகரிக்கும்.
- அதிகப்படியான காபி அசிடிட்டி மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
- காபி தூக்கத்தை கெடுக்கிறது.
- கர்ப்பிணிப் பெண்கள் காபி குறைவாக குடிக்க வேண்டும், ஏனெனில் இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?
ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ளக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது தோராயமாக 4 கப் காபிக்கு சமமான அளவாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ