உடல் எடையை உடனே குறைக்க இந்த உணவுகள் உங்கள் டயட்டில் இருப்பது அவசியம்
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அனைத்தையும் விட்டுவிட்டு பசியுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சரியான, சத்தான உணவை , சரியான அளவில், சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வகையான வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள். இன்று உடல் எடையை குறைக்க பல வகையான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இப்படிப்பட்ட சில பொருட்களால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். பலர் உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் தீவிரமான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும், பல சமயங்களில் இவற்றாலும் உடல் எடை குறைவதில்லை.
இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாகிவிட்டது, ஏனெனில் அதற்கு உணவில் அதிக கட்டுப்பாடு தேவைப்படுகிறது. ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அனைத்தையும் விட்டுவிட்டு பசியுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சரியான, சத்தான உணவை , சரியான அளவில், சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமாக இருக்க, ஒரு நபர் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உடல் எடையை (Weight Loss) குறைக்க உதவும். சில குறிப்பிட்ட உணவுகளை நமது டயட்டில் சேர்த்து வந்தால், நம் உடல் எடையை எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்கலாம். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில அத்தகைய சில உணவுகள பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு சிறந்ததாக கருதப்படும் உணவுகள் (Best Foods For Weight Loss)
அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் அதாவது வால்நட்களை (Walnut) உட்கொள்வது இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஒரு கைப்பிடி அளவு அக்ரூட் பருப்பில் சுமார் 4 கிராம் புரதம் மற்றும் இரண்டு கிராம் நார்ச்சத்து உள்ளது. இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | அசிங்கமான குண்டு குண்டு தொப்பை குறைய இந்த மேஜிக் பானங்கள் போதும்
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் (Pumpkin Seeds) ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றில் மிகக் குறைந்த கலோரிகள் (Low Calorie) காணப்படுகின்றன. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவும் மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர, பூசணி விதைகளில் பீட்டா கரோட்டின் என்ற கலவை உள்ளது, இது உடலுக்கு வைட்டமின் ஏ -வை வழங்குகிறது. மேலும் அதை உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கலாம். இதில் சோடியம் இல்லை. மேலும் இதில் கொழுப்பும் இல்லை.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் (Sweet Potato) மிகக்குறைந்த கலோரிகள் உள்ளன. மாவுச்சத்துள்ள வெள்ளை உருளைக்கிழங்கிற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது ஒரு வேர் காய்கறி என்பதால், இதில் நீர் சத்தும் அதிகமாக உள்ளது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் (Cinnamon) பல அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்ட் பண்புகள் உள்ளன. இலவங்கப்பட்டையின் மிகவும் நன்கு அறியப்பட்ட நன்மை எடை இழப்புக்கு உதவும் அதன் திறன் ஆகும். இலவங்கப்பட்டை இயற்கையாகவே பசியை அடக்கும் குணங்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது.
பூண்டு
இது எடை ஏறாமல் இருக்கவும் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தின் ஏற்றம் உடல் எடையை விரைவாகக் குறைக்கிறது. பசியை குறைப்பதும் பூண்டின் (Garlic) மற்றொரு நன்கு அறியப்பட்ட நன்மையாகும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இதனால், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தமா? கருப்பு மிளகை இப்படி பயன்படுத்துங்க.. நிவாரணம் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ