Health Risks For Different Blood Groups: நம் அனைவரின் உடலிலும் இரத்தம் ஓடுகிறது. இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இரத்தக் குழுவானது நமது பெற்றோரிடமிருந்து நமக்கு கிடைக்கும் பரம்பரைக்கான சான்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாம் யாருக்கு, யார் நமக்கு இரத்தம் கொடுக்க முடியும் என்பதை இரத்தக் குழு மூலம் தெரிந்துகொள்ளலாம். இரத்தக் குழு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமக்கு எந்த நோய் வரும் அபாயம் உள்ளது என்பதை இரத்தக் குழுக்களில் இருந்தும் கண்டறியலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஆம், நமக்கான பிளட் க்ரூப் மூலமே, நாம் எந்தெந்த நோய்களால் பாதிக்கப்படக் கூடும் என்பதை கண்டறியய் முடியும்.


இரத்தத்தில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன: ஏ, பி, ஏபி மற்றும் ஓ. 


எந்த பிரிவு இரத்தம் இருந்தால், எந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது? இதைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? முழுமையான விவரத்தை இங்கே காணலாம்.


ஏபி இரத்த பிரிவு (AB Blood Group)


- AB இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு இதய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. 
- இவர்களுக்கு எந்த நேரத்திலும் திடீரென மாரடைப்பு வரலாம். 
- ஏபி இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு நினைவாற்றலும் பலவீனமானதாக இருக்கும்.
- இந்த இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை இரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம். 
- AB இரத்த வகை உள்ளவர்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.


A மற்றும் B இரத்த பிரிவு (A Blood Group, B Blood Group)


- A மற்றும் B இரத்தக் குழுக்களில் உள்ளவர்களுக்கு இரத்தம் உறைதல் பிரச்சனை, அதாவது உடலில் இரத்தக் கட்டிகள் உருவாகும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
- A மற்றும் B இரத்தக் குழுக்கள் உள்ளவர்களுக்கு அவர்களது வாழ்வு காலத்தில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. 
- A மற்றும் B இரத்த வகை உள்ள சிலருக்கு, நினைவாற்றல் பிரச்சனை வரும் வாய்ப்புகள் உள்ளன.
- சிலருக்கு மூளையின் செயல்பாட்டிலும் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
- இந்த இரத்த வகை உள்ளவர்களின் கொலஸ்ட்ரால் அளவு தொடர்ந்து ஏற்ற இறக்கத்தோடு, கட்டுக்குள் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு மாரடைப்பும் ஏற்படலாம். 
- A வகை இரத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்த பிரச்சனைகள் இருக்கும். 
- இவர்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.


மேலும் படிக்க | கொழுப்பை எரிக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்... எடுத்துக் கொள்ளும் சரியான முறையும்... பக்க விளைவுகளும்


O இரத்த பிரிவு (O Blood Group)


- O இரத்தக் குழுவும் இரண்டு வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன - O பாசிடிவ் மற்றும் O நெகடிவ். 
- மற்ற இரத்தக் குழுக்களை விட O இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 
- O+ இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு இதய நோய் வராது என கூறப்படுகின்றது. 
- O+ இரத்தக் குழுவைக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றுநோயின் அபாயமும் குறைவாகவே இருந்தது.
- O+ உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருக்கிறார்கள்.
- இவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
- O- இரத்தக் குழு சில அளவுருக்களில் நன்மை பயக்கும், சில சூழ்நிலைகளில் ஆபத்தானது.


ஓ- இரத்தப் பிரிவு யுரிவர்சலாக உள்ளது. O- இரத்த பிரிவு உள்ளவர்கள் தங்கள் இரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த இரத்த வகை, அதாவது O- இரத்த வக்கை உள்ள நபரின் இரத்தத்தை மட்டுமே பெற முடியும். O- இரத்தம், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த இரத்தக் குழுவாக உள்ளது. அவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டால், அது எப்போதும் அவசரநிலையாகவே இருக்கும். ஏனெனில் இந்த இரத்தக் குழுவைக் கொண்டவர்கள் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டவுடன் மரணத்தை செல்லத் தொடங்குகிறார்கள்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மெட்டபாலிஸத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரித்து... தொப்பையை கரைக்கும் மசாலாக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ