காலை எழுந்தவுடன் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!! நீரிழிவு நோயாக இருக்கலாம்!!
Health Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சிறுநீரகங்கள், கண்கள், இதயம் மற்றும் உடலின் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
Health Tips: கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும். அத்தகைய சூழ்நிலையில் நம் உடலால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது. இன்சுலின் பற்றாக்குறையால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்கள், கண்கள், இதயம் மற்றும் உடலின் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோய் ஆபத்தான நோயாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணம்.
ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக அகற்ற முடியாது, அதை கட்டுப்படுத்துவது மட்டுமே நம்மால் செய்யக்கூடிய ஒரே விஷயமகும். சில சமயங்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகளை அலட்சியம் செய்வது நம்மை சிக்கலில் சிக்க வைக்கும். முக்கியமாக, காலை எழுந்தவுடன் ஒருவருக்கு சில அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை கண்டிப்பாக புறக்கணிக்கக் கூடாது. அந்த அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயின் காலை அறிகுறிகள் (Morning Signs And Symptoms of Diabetes):
காலையில் எழுந்தவுடனேயே தாகம் எடுத்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் நீரிழிவு நோயைக் குறிக்கின்றன. எழுந்தவுடன் அரிப்பு, சோர்வு, பலவீனம் மற்றும் பசி அதிகரித்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கக்கூடும். எடை இழப்பு மற்றும் பகல் அல்லது இரவில் அதிகரித்த தாகம் ஆகியவை இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறிக்கின்றன. இரவில் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், இதுவும் சர்க்கரை (Blood Sugar) நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது?
கல்லீரல் நமது உடலை அன்றைய வேலைக்குத் தயார்படுத்தி, அதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க, இரத்தச் சர்க்கரையை வெளியிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு (Diabetes) நோயாளிகள் காலையில் உயர் இரத்த சர்க்கரையை உணர்கிறார்கள். இதனால் காலையில் தொண்டை மற்றும் வாய் வறண்டு போகும். பார்வை பலவீனமாகிறது மற்றும் சோர்வுடன், பசியும் தொடங்குகிறது. உங்கள் அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு கூட நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் அனைத்தும் நாள் முழுவதும் உணரப்படலாம்.
மேலும் படிக்க | ஆண்மை பிரச்சனையா... நரம்பு தளர்ச்சியா... பூனைக்காலி விதை ஒன்றே போதும்...!
நீரிழிவு நோயாளிகள் உணவில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்?
உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாள் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும், பல நேரங்களில் நாம் அதை உணர்வதில்லை. ஏனென்றால் உடலில் உள்ள ஆரோக்கியமான இன்சுலின் அளவு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நீரிழிவு நோயாளிகள் நாள் முழுவதும் என்ன சாப்பிடுகிறார்கள் மற்றும் குடிக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உணவுப்பழக்கம் இரத்த சர்க்கரையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படாவிட்டால், நோய் மிகவும் தீவிரமடையும்.
நீரிழிவு நோயின் இயல்பான அறிகுறிகள்
- அதிக பசி எடுப்பது
- திடீர் எடை இழப்பு
- கை கால்களில் கூச்சம்
- சோர்வு மற்றும் பலவீனம்
- வறண்ட தோல்
- நோய் குணமடைய தாமதம்
- அதிக தாகம்
- இரவில் அதிக சிறுநீர் கழித்தல்
- தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவது
- முடி உதிர்தல்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடாவடியா எகிறும் எடையை குறைக்க நூல்கோலை இப்படி சாப்பிடுங்க... ஈசியா குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ