Side Effets of Ginger Water: இஞ்சி பல வித அரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதை நாம் பல்வேறு உனவு வகைகளில் சேர்க்கிறோம்.  இதை நாம் பல வழிகளிலும் உட்கொள்கிறோம். இஞ்சி, தேநீர், துவையல், சாம்பார், ரசம், காய்கறிகள், பிரியாணி, கலவை சாதங்கள், தொக்கு என பல வகையான உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றது. இது பல உடல் உபாதைகளுக்கும் வீட்டு வைத்தியமாக உதவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சித் தண்ணீரைக் குடிப்பதுண்டு. இஞ்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு பொருளுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான். இஞ்சியும் அப்படித்தான். குறிப்பாக, வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். இதனால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


வாந்தி மற்றும் வயிற்று வலி


காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பவர்களுக்கு வாந்தி சங்கடம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதுமடுமின்றி, இதை அதிக அளவில் உட்கொண்டால், வயிற்று வலியும் (Stomach Pain) வரலாம்.


நெஞ்செரிச்சல்


இஞ்சி தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல் (Heartburn) ஏற்படக்கூடும். இஞ்சி நீர் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை அதிகரிக்கும். இதனால் இதயத்தில் எரிச்சல் ஏற்படுகின்றது. இதயம் தொடர்பான நோய்கள் இருந்தால், இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 3 விஷயங்கள் அவசியம்: உடனே தெரிஞ்சிக்கோங்க


இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது


இஞ்சி இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) குறைக்கும் ஆற்றல் கொண்டது. இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாக உள்ளவர்கள் இஞ்சி தண்ணீரை உட்கொள்ளக்கூடாது. இதனை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென குறையக்கூடும். இது ஆபத்தாக முடியக்கூடும். 


குறைந்த இரத்த அழுத்தம்


இஞ்சி இரத்தத்தை மெலிக்கும் தன்மை கொண்டது. இது இரத்த ஓட்ட அளவை அதிகரிக்கிறது. இந்த பண்பு காரணமாக, குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) உள்ள நோயாளிகளுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கலாம். ஆகையால் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இஞ்சி உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.


மருந்துகளுடன் உட்கொளதை தவிர்க்கவும்


நீரிழிவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இஞ்சி நீரை உட்கொள்ளக்கூடாது. இந்த அனைத்து நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் மருந்துகளுடன் இஞ்சி ரியாக்ட் செய்யக்கூடும். இது உங்கள் பிரச்சனையை மோசமாக்கலாம். ஆகையால் இந்த நோயாளிகள் சற்று கவனமாக இருப்பது நல்லது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )


மேலும் படிக்க | உடலுக்கு ஆதாரமான முதுகெலும்பு வலுவாக இருக்க... முதுகு வலி- கழுத்து வலி நீங்க...செய்ய வேண்டியவை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ