கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்கடங்காமல் போனால் இந்த அறிகுறிகள் தோன்றும்: ஜாக்கிரதை!
Symptoms of High Cholesterol: கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். இது இரண்டு வகைப்படும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்.
Symptoms of High Cholesterol: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், பல வித நோய்கள் நம்மை மிக எளிதாக ஆட்கொண்டு விடுகின்றன. அவற்றில் ஒன்று உயர் கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். இது இரண்டு வகைப்படும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்.
நல்ல கொலஸ்ட்ரால் நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எனினும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் எப்போதும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது அதிகரிப்பதால், இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பொதுவாகவே குளிர்காலத்தில் இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆகையால், இந்த பருவத்திலும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன? இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், நமக்கு உடல் சில அறிகுறிகளை காட்டும். அதிக கொலஸ்ட்ராலின் இந்த அறிகுறிகளைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். உயர் கொலஸ்ட்ராலுக்கான சில முக்கிய அறிகுறிகளை பற்றி இங்கே காணலாம்.
கைகள் மற்றும் கால்களில் குளிர்ச்சி:
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்போது இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால், கைகள் மற்றும் கால்களில் குளிர்ச்சி ஏற்படுகின்றது. குளிர்காலத்தில் உங்கள் பாதங்கள் இயல்பை விட நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருந்தால், அதை அதிக கொலஸ்ட்ராலின் பொதுவான அறிகுறியாக எடுத்துகொள்ள வேண்டும்.
சரும நிறத்தில் மாற்றம்:
குளிர்காலத்தில் சருமம் மஞ்சள் நிறமாக மாறினால், அதுவும் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகும். கொலஸ்ட்ரால் அதிகமானால் கண்களைச் சுற்றியுள்ள பகுதி மஞ்சள் நிறமாகத் தோன்றுவது மிகவும் பொதுவானது.
மேலும் படிக்க | உடல் எடையை பட்டுனு குறைக்க... இந்த 4 உணவுகள் ரொம்ப முக்கியம் - அடிக்கடி சாப்பிடுங்க
சோர்வு:
எந்த காரணமும் இல்லாமல் உடலில் அதிக சோர்வு இருந்தால், அதுவும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் ஆற்றல் குறைவாக இருந்து, நீங்கள் வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்ந்தால், அதை எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
எடை அதிகரிப்பு:
குளிர்காலத்தில் உங்கள் எடை அதிகமாக அதிகரிப்பது வளர்சிதை மாற்றக் கோளாறுக்கான அறிகுறியாகும். இந்த கோளாறு காரணமாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, குறைந்து சமநிலையற்று இருக்கிறது. இது மாரடைப்பு போன்ற அபாயங்களுக்கு வழி வகுக்கும்.
மனநிலை மாற்றங்கள்:
பதட்டம் அதிகரிப்பது கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. மனச்சோர்வு இருப்பது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம், இது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
கெட்ட கொலஸ்ட்ராலை தடுப்பது எப்படி?
- ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
- போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம்.
- உடல் செயல்பாடுகளை தொடர்ந்து செய்யுங்கள்.
- உடல் பருமனை குறைக்க வேண்டும்.
- புகைபிடிப்பதை தவிர்ப்பது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் சின்க்கில் போட வேண்டாம்! இந்த ஆபத்துகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ