கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு உலக சுகாதார அமைப்பின் கவலையை எழுப்பியுள்ளது. WHO இந்த புதிய Omicron மாறுபாட்டை 'variant of concern(VOC)' என வகைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பதிப்பு B.1.1.529 தென்னாப்பிரிக்காவில் உருவானது மற்றும் நவம்பர் 22 அன்று சர்வதேச தரவுத்தளத்துடன் பகிரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SARS-CoV-2 மாறுபாடு அதன் சிக்கலான மரபணு குறியீட்டின் காரணமாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மாறுபாடு ஆகும். இது விஞ்ஞானிகளையும், சுகாதார நிறுவனங்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.


ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்


ஓமிக்ரான் COVID மாறுபாடு என்றால் என்ன?
தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் (Coronavirus) கண்டறியப்பட்டது. பி 1.1.529 என கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா வைரஸுக்கு ஓமிக்ரான் (Omicron) என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இது மிக மோசமான டெல்டா வகை கொரோனா வைரஸை விட அதிவேகமாக பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளை செயலிழக்கச் செய்யக் கூடியதாகவும் இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


ஓம்ரான் மாறுபாடு எண்ணிக்கைகள்
தற்போது இஸ்ரேல், பெல்ஜிய, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள தொற்றுநோய்க்கான பதில் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் (CERI) இயக்குனர் Tulio de Oliveira கருத்துப்படி, B.1.1529 மாறுபாடு தற்போது Gauteng இல் 90% எண்ணிக்கைகளில் உள்ளது.


ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள்
புதிய மாறுபாடு பற்றிய தகவலுக்குப் பிறகு, பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுடனான விமானங்களை நிறுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் 'ஓமிக்ரான்' மாறுபாடு அதிகமாக பரவுகிறது. இது கடுமையான நோயை ஏற்படுத்தும். டெல்டா போன்ற பிற தொற்று வகைகளைப் போலவே, சில நபர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது.


ALSO READ | Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR