Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் என்ற கோவிடின் மற்றொரு அவதாரம் உலகில் பீதிகளை எழுப்பத் தொடங்கிவிட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 02:28 PM IST
  • ஒமிக்ரான் பரவல் அதிகம்
  • பயணத்தடைகள் தொடங்கின
  • உலகில் சுகாதார அச்சத்தை எழுப்பும் கொரோனாவின் பிறழ்வு
Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது!  பயணக் கட்டுப்பாடுகள் அமல் title=

புதிய கோவிட் பிறழ்வு Omicron மேலும் நாடுகளுக்கு பரவுவதால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பல்வேறு தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு  கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முரணானது.

இது மாறுபாடுகளை முழுமையாக ஆய்வு செய்வதற்கு முன்பு எந்தவொரு அதிகப்படியான கட்டுப்பாடுகளையும்  (Travel Ban) விதிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு  எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஓமிக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸின் பிறழ்வு (New Coronavirus Varient) பல ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுளது. இதனால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டன.  

இரண்டு வழக்குகள் லண்டனில் பதிவானதும், முகக்கவசம் அணிவது மற்றும் சர்வதேச பயணிகளை பரிசோதிப்பது தொடர்பான விதிகளை இங்கிலாந்து சனிக்கிழமை கடுமையாக்கியது. ஜெர்மனி மற்றும் இத்தாலியில் சனிக்கிழமையன்று புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டன, பெல்ஜியம், இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு வரும் பயணிகளிடையே புதிய ரக கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது. 

ALSO READ | கொரோனா வைரசின் புதிய பிறழ்வு ஆபத்தானது! ஆனால் பயணத்தடை அவசியமில்லை

ஓமிக்ரான் மாறுபாடு ஏற்கனவே அமெரிக்காவிலும் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமெரிக்காவில், அரசாங்கத்தின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபாசி கவலை தெரிவிக்கிறார். 

கொரோனாவின் இந்த புதிய மாறுபாடு, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிக்கும் என்ற  அச்சத்தின் காரணமாக, தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய லாக்டவுன் கட்டுப்பாடுகள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.

உலகெங்கிலும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றுநோய் (Coronavirus Pandamic) தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

தற்போது ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவின் டெல்டா பிறழ்வைவிட ஓமிக்ரான் மாறுபாடு அதிகமாக பரவக்கூடியதா என்பதை கணிப்பதற்கு இன்னும் அதிக காலம் எடுக்கும் என்பதால், எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

READ ALSO | Sputnik light கோவிட் தடுப்பூசி டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News