Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களை உருவாக்க இது ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். நீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின் மூளை மற்றும் நரம்பு செல்கள் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் B12 இன் குறைபாடு உடலில் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த குறைபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் சோர்வு, எடை இழப்பு, இரத்த சோகை, தசை பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். 


வைட்டமின் பி12: இதன் முக்கியத்துவம் என்ன? (What is the Importance of Vitamin B12) 


வைட்டமின் பி12 (Vitamin B12) மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இரத்த அணுக்களை அதிகரிக்கிறது, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது, கருவுறுதலை மேம்படுத்துகிறது. 


ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது?


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் 2.4 mcg வைட்டமின் B12 தேவைப்படுகிறது, இருப்பினும் கர்ப்பிணிகளுக்கு தினமும் 2.8 mcg தேவைப்படலாம். குழந்தைகளுக்கு 0.4 முதல் 1.8 mcg வரை தேவைப்படலாம்.


வைட்டமின் பி12 இன் முக்கிய ஆதாரங்கள் எவை? 


வைட்டமின் பி12 பொதுவாக விலங்கு உணவுகளில் காணப்படுகிறது. 


மீன்


மீன் (Fish) வைட்டமின் பி12 இன் சிறந்த மூலமாகும். ஒரு சாதாரண அளவிலான மீனை உட்கொள்வதால், தினசரி தேவையை பூர்த்தி செய்யும் 2.4 mcg வைட்டமின் பி12 கிடைக்கும். சமைத்த மட்டியில் அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது. ஒரு முறை இதை உட்கொண்டால், தினசரி தேவையில் 3500% க்கும் அதிகமாக கிடைக்கும். 


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை சட்டென கரைய வைக்கும் கிச்சன் கில்லாடிகள்


முட்டைகள்


ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் (Eggs) வைட்டமின் பி12 தினசரி தேவையில் 20% உள்ளது. முட்டையில் உள்ள பெரும்பாலான வைட்டமின் பி12 மஞ்சள் கருவில் உள்ளது, முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிதளவு வைட்டமின் உள்ளது. ஒரு பொரித்த முட்டை, தினசரி வைட்டமின் பி12 தேவையில் 70% -ஐ வழங்குகிறது.


மாட்டிறைச்சி


100 கிராம் மாட்டிறைச்சியில் (Beef) தினசரி வைட்டமின் பி12 தேவையில் 314% உள்ளது. மாட்டிறைச்சி ஹாம்பர்கர்கள் மற்றும் வறுத்த ஆட்டுக்குட்டி மூலம் உங்கள் தினசரி வைட்டமின் பி தேவையில் கிட்டத்தட்ட 100% கிடைக்கிறது.


கோழி


வைட்டமின் பி12 குறைபாட்டை (Vitamin B12 Deficiency) போக்க, கோழிக்கறியையும் (Chicken) சாப்பிடலாம். 100 கிராம் கோழியில் 0.3 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது. இது தவிர, கோழி இறைச்சி புரதத்தின் நல்ல மூலமாகும்.


வைட்டமின் பி12 குறைபாட்டின் முதல் அறிகுறி என்ன?


உடலில் வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு இருந்தால், கைகள், கால்கள் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் உணர்வின்மை ஏற்படுகிறது. நாக்கின் நிறமும் வெளிர் பழுப்பு நிறமாக மாறும். ஆரம்பத்தில் கவனம் செலுத்தாவிட்டால், உங்கள் எலும்புகள் வலுவிழந்து, பலவீனம் மற்றும் சோர்வு நீடித்து, இரத்த சோகைக்கு ஆளாக நேரிடும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 80+ வயதிலும் மூட்டு வலி வராமல் இருக்க... உணவுகளும் பழக்கங்களும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ