தினமும் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா..? குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்..!
![தினமும் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா..? குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்..! தினமும் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா..? குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்..!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2023/07/05/302296-drinking.jpg?itok=dSeX8KX1)
தினமும் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த சிறிய அலசல்.
ஒரு சிலர், ஆல்கஹாலினால் ஏற்படும் நன்மைகளை ஆராய்ந்து அந்த பழக்கத்தை மேலும் ஊக்குவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் குடிப்பழக்கம் நம் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது நமக்கே தெரியும். சிலர் குடித்தால் ரிலாக்ஸாக இருக்கிறது என்ற காரணத்தை வைத்து அதிகமாக குடிக்கின்றனர். ஆனால், இது கடைசியில் அனைவருக்கும் ஆபத்தைதான் தரும். குடிப்பழக்கத்தினால் வரும் ஆபத்துகளை இங்கே பார்ப்போமா..?
1. தூக்கம் கெட்டுப்போகும்!
நீங்கள் குடித்த பிறகு, கொஞம் லேசாக உணர்வீர்கள். கொஞ்சம் தூக்கம் வருவது போலவும் உணர்வீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கது. நீங்கள் தினசரி குடித்து வந்தால் உங்களது தூக்கம் கெட்டுப்போகும். 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் குடிப்பவர்கள் மிகவும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தூங்கும் கொஞ்ச நேரத்திலு அவர்களுக்கு குறட்டை விடும் பழக்கமும் ஏற்படுமாம்.
மேலும் படிக்க | கஷ்டப்படாமல், இஷ்டப்பட்டே உடல் எடையையும், தொந்தியையும் குறைக்க 8 டிப்ஸ்
2.மூளையின் ஆற்றல் குறையலாம்:
தினசரி மது அருந்துவதால் உங்கள் மூளையும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு கப் ஆல்கஹால் கூட அதை குடிப்பவரின் மூளை செயல்படும் ஆற்றலை குறைப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. ஒரு நாளில் ஒரு கப்பிற்கு அதிகமாக குடிப்பவர்களின் மூளை மிகவும் குறைவான ஆற்றலுடன் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3. மனநிலை பாதிப்படையும்:
குடிக்கும் போது அனைத்தும் மிகவும் நன்றாக தோன்றும். குழந்தை போல உணர்வீர்கள். ஆனால், அடிக்கடி குடிப்பவர்களது மனநிலை தாறுமாறாக அடிவாங்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மது, உங்கள் உடலில் கலந்த பிறகு, ரத்தத்தில் இணைந்த பிறகு அந்த ஹேப்பி மனநிலை காணாமல் போய்விடுமாம். அதிகம் குடிப்பவர்கள் பதற்றம், மன அழுத்தம், கோபம் போன்ற பல வகையான மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனராம்.
4. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்:
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மது உருகுலைத்து விடும் என்கின்றனர், மருத்துவர்கள். தினசரி குடிப்பதால், உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை இழக்கம். நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து நோயை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாகும். செல்களில் உள்ள சக்தி குறைந்து பயனற்று போய் விடும். இதனால் உங்கள் இம்மியூனிட்டி சக்தி குறைந்து எந்த நோய் தாக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு சென்றுவிடும். இதனால்தான் குடிப்பவர்கள் பலருக்கு மஞ்சள் காமாலை வருகிறது.
5. உடல் எடை அதிகரிக்கும்:
மது, உங்கள் உடலில் அதிக கொழுப்புகளை உருவாக்குகிறது. கொழுப்புகளை உருவாக்குவது மட்டுமன்றி உங்கள் ஊட்ட்ச்சத்தை மொத்தமாக உருஞ்சி விடுகிறது. ஒரு கிராம் ஆல்கஹால் 7 கலோரிகளுக்கு சமம் என்கின்றனர், மருத்துவர்கல். ஆல்கஹால் கலந்த மது மட்டுமன்ரி, வைனிலும் இதே பிரச்சனைதான் உள்ளதாம். ஒரு கிளாஸ் வைனில் 120 கலோரிகள் வரை இருக்குமாம். இதில், தினசரி குடித்து வந்தால் இந்த கொழுப்பின் அளவு மேலும் மேலும் அதிகரித்து உடல் எடை கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க | கல்யாண முருங்கையின் சூப் குடித்தால் மலட்டு தன்மை போகும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ