Cervical Cancer Meaning, Prevention, Treatment: கடந்த இரண்டு நாட்களாக இந்தியா முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்படும் கேள்வி, “What is Cervical Cancer?” என்பதுதான். இதற்கு காரணம், பாலிவுட்டின் பிரபல மாடலும் நடிகையுமான பூனம் பாண்டேதான். இவரது சமூக வலைதள பக்கத்தில் கடந்த 2ஆம் தேதி கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திடீரென்று நேற்று பூனம் பாண்டே தான் இறக்கவில்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், கருப்பை வாய் புற்றுநோயற் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும, இந்த நாேயை தடுக்கும் HPV தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள பெண்களை அறிவுருத்தி இந்த செயலை செய்ததாகவும் கூறினார். இவரது இந்த செய்கையினால், ஒரு பக்கம் அவர் மீது பலருக்கு வெறுப்பு எழுந்தாலும், இன்னொரு பக்கம் கருப்பை வாய் புற்றுநாேய் என்றால் என்னவென்று பலர் தெரிந்து கொண்டு வருகின்றனர். இந்த பதிவில் நாமும் அது குறித்து தெரிந்து கொள்வோம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?


கருப்பையின் வாயில் அல்லது கருப்பை வாயின் கீழ் பகுதியில் இருக்கும் ஒரு கட்டியினால் ஏற்படும் புற்றுநோய் இது. கருப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கர்பப்பை வாயின் உயிரணுக்களில் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் ஒரு வகை நோய் பாதிப்பால் இந்த புற்றுநோய் பரவும். இந்த நோய் பாதிப்பு, பாலியல் தொற்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள், பாதிப்புகளை இங்கு பார்ப்போம். 


மேலும் படிக்க | இரத்த அழுத்தத்தை குறைக்க..‘இந்த’ தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்துங்கள்!


கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள்:


>மாதவிடாய் காலத்தின் இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பின் (Menopause) காலத்திற்கு பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல். 


>அடர்த்தியாகவோ, தண்ணீர் போலவோ வெள்ளைப்படுதல். அதில் இருந்து துர்நாற்றம் ஏற்படுதல். 


>உடலுறவின் போது வலி ஏற்படுதல்.


>சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல்.


>சோர்வு மற்றும் எடை இழப்பு


>முதுகு அல்லது கால் வலி


>கால்கள் வீக்கமாக இருப்பது.


>பசியின்மையாக இருப்பது.


>சிறிய அடியிலும் எலும்புகளில் வலி அல்லது எலும்பு முறிவு ஏற்படுதல்.


>இரத்த சோகை அல்லது இரத்த சிவப்பணு எண்ணிக்கை குறைவாக இருத்தல்.


கருப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய ஆபத்து காரணிகள்:


>பாலியல் தொற்றில் மிகவும் கொடியது, HPV 16 மற்றும் HPV 18 போன்ற நோய்கள். இதன் காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும்.


>பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.


>வயது வருவதற்கு முன்பு பாலியல் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளுதல்.


>அதிகம் பேருடன் பாலியல் உறவு கொள்ளுதல்.


>புகையிலை பயன்பாடு


>அதிக கருத்தடை மாத்திரை உபயோகித்தல்


>மரபணுவினால் ஏற்படும்


>குடும்பத்தினருக்கு ஏற்கன்வே கருப்பை வாய் புற்றுநோய் இருத்தல்.


>HPV தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளாதது.


>நோய்த்தடுப்பு மருந்துகளின் பயன்பாடு இல்லாமல் இருத்தல். 


தடுப்பது எப்படி?


தடுப்பூசி பயன்பாடு:


கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் சில வகையான வைரஸ்களில் இருந்து HPV நோய் தடுப்பூசிகள் பாதுகாக்க முடியும். பாலியல் செயலில் ஈடுபடுவதற்கு முன்பு தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படுகிறது.


பாதுகாப்பான உடலுறவு:


HPV நோய் பரவும் அபாயத்தைக் குறைக்க உடலுறவின் போது ஆணுறைகளை (Condoms) பயன்படுத்துங்கள். இருப்பினும், ஆணுறைகள் HPV நோய்க்கு எதிராக முழுமையாகப் பாதுகாக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


HPV சோதனை:


30 வயதிற்கு அதிகமாக இருப்பவர்கள் இது குறித்த மருத்துவ சோதனையை மேற்கொள்ள வேண்டும். 


குறைவான நபர்களுடன் தொடர்பு..


குறைவான நபர்களுடன் பாலியல் உறவினை வைத்துக்கொள்ளலாம். இதை குறைப்பதன் மூலம் HPV பரவும் அபாயம் குறையும். இதனால் பாலியல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். 


புகைபிடிப்பதை நிறுத்துவது:


புகைபிடித்தல், கருப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்படுகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.


ஆரோக்கியமான உணவு பராமரிப்பு:


ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட சத்தான உணவை சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 


நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கவும்:


முறையான சுகாதாரத்தை பேணுவது நோய்த்தொற்றுகளின் பரவலைத் தடுக்கும். பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் வாசனை திரவியங்களை தவிர்த்து, சுத்தமாக வைத்திருங்கள். 


மேலும் படிக்க | Bone Health: இதையெல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க... எலும்பு வீக் ஆயிடும் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ