Mucormycosis: யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்? தற்காப்பாக எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது?
கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது `கருப்பு பூஞ்சை` தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: Mucormycosis என்பது கொரோனா வைரஸால் தூண்டப்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும். இது சமீப காலங்களில் உருப்பு மாற்றுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஐ.சி.யுகளில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளின் நோய் மற்றும் இறப்புக்கு ஒரு காரணியாக இருந்து வருகிறது. இது ஜைகோமைகோசிஸ் (Zygomycosis) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பூஞ்சை தொற்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது அவர்களை பாதிக்கிறது. இந்த தொற்று நுரையீரல் மற்றும் சைனஸை பாதிக்கிறது. திறந்த காயங்கள் அல்லது வெட்டுக்கள் மூலமாகவும் இந்த பூஞ்சை உடலில் நுழைகிறது.
கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது 'கருப்பு பூஞ்சை' தொற்று, கவனிக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த பூஞ்சை தொற்று முக்கியமாக பல வித நோய்களுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவர்களை பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த பூஞ்சை (Black Fungus) சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அவர்களது திறனைக் குறைத்து அவர்களது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.
ALSO READ: கோவிட் நோயாளிகளைத் தாக்கும் Black Fungus தொற்று எவ்வளவு ஆபத்தானது?
பத்திரிகை புலனாய்வு பணியகம் (PIB) பொதுமக்களின் நலனுக்காக தகவல்கள் நிரம்பிய பல இன்போ கிராபிகளையும் வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இவற்றை பகிர்ந்த பிஐபி, "மியூகோமிகோசிஸ் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?" என்று இதற்குத் தலைப்பிட்டது.
How to reduce the risk of #Mucormycosis?
Control hyperglycemia
Monitor blood glucose level
Use steroids judiciouslyDo not miss warning signs and symptoms
Do not hesitate to seek aggressive investigation
Do not lose crucial time to initiate treatment
"மியூகோமிகோசிஸ் (Mucormycosis ), கவனிக்கப்படாவிட்டால், அது ஆபத்தானதாக மாறக்கூடும். இந்த பூஞ்சை வித்திகளை காற்றில் இருந்து சுவாசித்தால் ஒருவரது சைனஸ் அல்லது நுரையீரல் பாதிக்கப்படும்" என்று சுகாதாரத் துறை முன்பு கூறியிருந்தது.
கண்கள் மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி மற்றும் சிவத்தல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், இரத்த வாந்தி மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவை மியூகோமிகோசிஸின் அறிகுறிகளில் அடங்கும் என்று விளக்கப்படம் கூறுகிறது.
"இந்த நோய் புதியதல்ல. ஆனால் இது இந்தியாவில் COVID-19 நோயாளிகளிடையே அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஸ்டெராய்டுகளின் அதிகப்படியான பயன்பாடு சர்க்கரை அளவை உயர்த்துகிறது. மற்றும் சில மருந்துகள் இந்த நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் பார்வை இழப்பு மற்றும் இறப்புக்கு இது வழிவகுக்கிறது. கருப்பு பூஞ்சை ஒரு COVID-19 நோயாளியை எளிதில் பாதிக்கிறது. இது மூளையை அடைந்தால், அது அபாயகரமானதாக இருக்கும்” என்று டாக்டர் லஹானே கூறுகிறார். அவர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
Mucormycosis நோயிலிருந்து உங்களை காத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவைகளின் பட்டியல் இதோ:
- ஹைப்பர் கிளைசீமியாவைக் கட்டுப்படுத்துங்கள்
- COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமானவர்கள் அவர்களது ரத்த குளூகோஸ் அளவுகளை அவ்வபோது சரிபார்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- ஸ்டீராய்டை சரியாக பயன்படுத்துங்கள். சரியான நேரம், சரியான அளவு மற்றும் சரியான காலத்தில் உட்கொள்வது மிக முக்கியமாகும்.
- ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது ஈரப்பதமூட்டிகளுக்கு சுத்தமான, ஸ்டெரைல் நீரைப் பயன்படுத்துங்கள்
- நுண்ணுயிர் எதிர்ப்பிகள் / பூஞ்சை காளான் மருந்துகளை சரியாகப் பயன்படுத்துங்கள்
செய்யக்கூடாதவைகளின் பட்டியல் இதோ:
- எச்சரிக்கை அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள்
- மூக்கடைப்பு ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் பாக்டீரியா சைனசிடிஸ் நோய்களாக கருத வேண்டாம். குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், ஆகியோர் எந்த அறிகுறையையும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
- பூஞ்சை நோய்க்குறியீட்டைக் கண்டறிவதற்கு பொருத்தமான (KOH படிதல் & நுண்ணோக்கி, கல்சர், MALDITOF) தீவிர பரிசோதனையை மேற்கொள்ளத் தயங்க வெண்டாம். ஆக்கிரமிப்பு விசாரணைகளைத் தேட தயங்க வேண்டாம்.
- மியூகோமிகோசிஸுக்கு சிகிச்சையைத் தொடங்க முக்கியமாக இருக்கும் துவக்க நிலை நேரத்தை வீணடித்து விடாதீர்கள்.
ALSO READ: அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR