Symptoms of Borderline Diabetes: ப்ரீ டயாபட்டீஸ் (Prediabetes) என்று அழைக்கப்படும் பார்டர்லைன் நீரிழிவு, ஒருவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் முன் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையாகும். இதை இம்பேர்ட் ஃபாஸ்டிங் குளூகோஸ் (Impaired Fasting Glucose) அல்லது குளூகோஸ் இண்டாலரன்ஸ் (Glucose Intolerance) என்றும் கூறுவதுண்டு. இந்த நிலை ஒருவருக்கு இருந்தால், . அவருடைய இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது, ஆனால் நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கருதப்படும் அளவுக்கு அதிகமாக இல்லை என்று பொருள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Prediabetes கட்டம் என்றால் என்ன?


இந்த கட்டத்திலும், உடல் எடுத்துக்கொண்ட கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதில் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யும். இருப்பினும், இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை அகற்றுவதில் குறைவான செயல்திறன் கொண்டிருக்கும். ஆகையால், உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும். இந்த நிலை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (Insulin Resistance) என்று அழைக்கப்படுகிறது.


ப்ரீ டயாபட்டீஸ் மற்றும் நீரிழிவு நோய்க்கு உள்ள வித்தியாசம் என்ன? (What is the Difference Between Pre Diabetes and Diabetes)


ப்ரீ டயாபட்டீஸ் இருந்தால் கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் என்று பொருள் கொள்ள முடியாது என்று டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார். இருப்பினும், அடுத்து என்ன நடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ரீ டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோயின் ஆபத்து சாதாரண இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களை விட 5 முதல் 15 மடங்கு அதிகமாக இருக்கும். உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், இது நீரிழிவு நோயை உருவாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | புற்றுநோயை உருவாக்கும் கிச்சன் பொருட்கள்! ‘இவை’ உங்கள் வீட்டில் இருந்தால் தூக்கி போட்ருங்க.


Prediabetes: இதன் ஆரம்ப கட்ட ஆபத்தை அடையாளம் காண்பது கடினம்


ஆரம்ப கட்டத்தில் இன்சுலின் எதிர்ப்பு உள்ள ஒருவருக்கு, இது நீண்ட காலம் தொடர்ந்தால், டைப் 2 நீரிழிவு நோய் வரலாம். ப்ரீ டயாபட்டீஸ் உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது. ஏனெனில் பலருக்கு இதற்கான எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. 
 
Borderline Diabetes: இதனால் வரும் அபாயங்கள் என்ன?


கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உடனடியாக இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் நிலை ஏற்படலாம். 


- எடை அதிகரிப்பு 
- உடல் உப்பசம்
- உயர் இரத்த அழுத்தம்
- குடும்பத்தில் ஏற்கனவே டைப் 2 நீரிழிவு நோய் இருப்பது
- அதிக கொழுப்பு
- 9 பவுண்டுகளுக்கு மேல் (4.08 கிலோ) எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்தல்
- உடல் செயலற்றுப் போவது


Borderline Diabetes: இந்த பிரச்சனைகள் வரக்கூடும்


- இதய நோய்
- சிறுநீரக பாதிப்பு
- கண்பார்வை குறைதல்
- நரம்பு பாதிப்பு


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Blood Purifiers: சுத்தமான இரத்தத்தை உருவாக்கும் உணவுகளில் முதலிடம் பிடிப்பது காயா பழமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ