தங்கம் உடலில் போட்டால் மின்னும், ஆனால் காரட்டை சாப்பிட்டால் உடலின் மெருகு ஏறும், அழகு கூடும், நோய்கள் அண்டாது. காரட் என்பது ஒரு காய்கறியின் பெயர் என்றால், மறுபுறம், தங்கத்தை அளக்கும் அளவீடு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அது மட்டுமல்ல புற்று நோய் (cancer) ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் காரட்டுக்கு உண்டு.  காரட்டில் அதிக அளவில் இருக்கும் கரோட்டின் என்கின்ற சத்து புற்றுநொயை தடுக்கும்.  காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. 


பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து காரட் சாறு  சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். 


காரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன.காரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.  


கரட்டை உட்கொள்வது வயிற்று நோய்கள், பித்தம், கபம் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். இது குடலில் சேமிக்கப்படும் மலத்தை விரைவாக சுத்தப்படுத்துகிறது.


காரட்டில்  புரோட்டீன், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்துக்கள் உள்ளன. அதைத் தவிர, கரோட்டின், தயாமின், ரிப்போபிலோவின் ஆகிய சத்துக்கள் உள்ளன. நோயில்லா வாழ்வு வேண்டுமானால், காரட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்...



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR