Vitamin B12 Foods: உடலில் காணப்படும் பல அறிகுறிகள் மிகவும் பொதுவானவை. அவற்றுக்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்? சோர்வு மற்றும் பலவீனம் அல்லது கைகள் மற்றும் கால்களில் கூச்சம் ஏற்படுவதை நாம் அடிக்கடி புறக்கணித்து விடுகிறோம். ஆனால் வைட்டமின் பி 12 இன் குறைபாடு காரணமாகவும் இத்தகைய அறிகுறிகள் காணப்படலாம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. வைட்டமின் பி 12 இன் குறைபாடு நரம்புகளை பாதிக்கிறது என்றும் இதனால் நரம்பு அடுக்கு சேதமடையக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவை அனைத்தையும் தவிர, வைட்டமின் பி 12 (Vitamin B12) இன் குறைபாடு இரத்த சோகை, எலும்பு பலவீனம், இரத்த சோகை மற்றும் மறதி போன்ற நோய்களை ஏற்படுத்தும். அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், பெரும்பாலான அசைவ உணவுகள் வைட்டமின் பி12 இன் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகின்றன. வைட்டமின் பி 12 இன் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதைத் தவிர, அதன் குறைபாட்டைப் போக்கும் சிறந்த உணவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.


வைட்டமின் பி12 அறிகுறிகள் ((Vitamin B12 Symptoms)


- சுவாசிப்பதில் சிரமம்
- அஜீரணம்
- பசியின்மை
- படபடப்பு
- கண்பார்வை குறைபாடு
- உடல் பலவீனம்
- உடல் களைப்பு 
- சிவப்பு நாக்கு
- நாக்கில் புண்
- தசை பலவீனம்
- வாய் புண்கள்
- தலைவலி


மேலும் படிக்க | இரத்த அழுத்தம் முதல் எடை இழப்பு வரை: ஆப்பிள் பழத்தின் அசத்தும் நன்மைகள்


வைட்டமின் பி 12 இன் குறைபாடு காரணமாக கைகளிலும் கால்களிலும் இத்தகைய அறிகுறிகள் காணப்படும்


வைட்டமின் பி 12 இன் குறைபாடு (Vitamin B12 Deficiency) நரம்புகளை மிகவும் பாதிக்கிறது. இந்த வைட்டமின் நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அதன் செயல்பாடு மெய்லினைப் பாதுகாப்பதாகும். நரம்புகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அடுக்குக்கு மெய்லின் தேவைப்படுகிறது. இந்த பாதுகாப்பு பலவீனமடைந்தால், நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட ஆரம்பிக்கின்றன.


வைட்டமின் பி12 குறைபாட்டை எவ்வாறு ஈடுசெய்வது?


வைட்டமின் பி12 குறைபாட்டைத் தடுப்பதற்கான சிறந்த வழி, சரியான உணவைச் சாப்பிடுவதுதான். உங்கள் உணவில் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் குறைபாட்டை உடலால் தானாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே, வைட்டமின் பி 12 கொண்ட உணவின் மூலம் மட்டுமே அதை ஈசுடெய்ய முடியும்.


எந்த உணவில் அதிக வைட்டமின் பி12 உள்ளது?


- மீன்
- கோழி
- முட்டைகள்
- பால்
- சீஸ்
- தயிர்
- இறைச்சி


இவை அனைத்தையும் தவிர, வைட்டமின் பி 12 -ஐ உடலில் சேர்க்க மிகவும் ஏற்றதாக கருதப்படும் பிற உணவுகளும் உள்ளன. உணவைத் தவிர, சப்ளிமெண்ட்ஸ் மூலமாகவும் வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்யலாம்.


தினமும் எவ்வளவு வைட்டமின் பி12 உட்கொள்வது நல்லது?


வைட்டமின் பி 12 இன் தேவை அனைவருக்கும் வேறுபட்டது. 18 வயது வரை, ஒவ்வொரு நபருக்கும் தினமும் 0.4 முதல் 1.8 எம்.சி.ஜி வைட்டமின் பி12 உணவில் தேவைப்படுகிறது. பெரியவர்களுக்கு தினசரி உணவில் 2.4 mcg வைட்டமின் B12 தேவைப்படுகிறது. அதேசமயம், கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்லது பாலூட்டும் பெண்களுக்கு தினமும் 2.8 எம்.சி.ஜி வைட்டமின் பி12 தேவைப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சளி, இருமல், காய்ச்சல்... அத்தனைக்கும் ஆப்பு வைக்கும் இலை வகைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ