இந்தியவை கொரோனா வைரஸ் தொற்று பாடாய் படுத்தி வரும் நிலையில், தற்போது ஜிகா வைரஸ் மெல்ல தன் ஆட்டத்தைத்  துவக்கியுள்ளது. இது மக்களை அதிகபட்ச பீதிக்கு ஆளாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் பாடசாலை பகுதியில் நேற்று ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்  தொடர்ந்து இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, கேரளாவில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு 15 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதார ஊழியர்கள் என்று கூறப்படுகின்றது.


ஜிகா வைரஸ் என்றால் என்ன


ஜிகா வைரஸ் (Zika Virus) பெரும்பாலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் இன கொசு (Ae. aegypti and Ae. albopictus) கடிப்பதால் பரவுகிறது. இந்த கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக கடிக்கின்றன.


டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலை ஏடிஸ் கொசுக்கள்தான் பரப்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிலிருந்து அவரது கருவுக்கு பரவக்கூடியது. இதன் காரணமாக, பிறக்கும் குழந்தைகளுக்கு மைக்ரோசெபலி மற்றும் பிற பிறவி குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதன் காரணமாக, குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு உள்ளிட்ட கர்ப்பத்தின் பிற சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளும் நபர்களுக்கும் இது பரவக்கூடும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.


ALSO READ: கேரளாவில் முதல் முறையாக சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு


ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள்


- பொதுவாக கொசுக்களால் (Mosquito) பரவும் இந்த நோய்க்கான அறிகுறிகளில் லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி ஆகியவை அடங்கும். 


- ஜிகா வைரஸ் 3–14 நாட்கள் வரை மனித உடலில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


- இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் பொதுவாக 2–7 நாட்கள் வரை நீடிக்கும். 


- ஜிகா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் தென்படுவது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.


ஜிகா வைரஸ் நோய்க்கான சிகிச்சை:


- ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்தோ தடுப்பூசியோ (Vaccine) கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 


- அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது நல்ல பயன்களைத்  தரலாம்.


- அதிக ஓய்வு எடுப்பது அவசியம். தேவையற்ற அலைச்சலைத் தடுக்க வேண்டும்.


- நீரிழப்பைத் தடுக்க அதிக திரவங்களை குடிக்கவும்.


- காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க தேவையான மருந்து எடுத்துக் கொள்ளவும்.


பாதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்பது உறுதிபடுத்தப்படும் வரை, ஆஸ்பிரின் மற்றும் பிற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAIDS) எடுத்துக் கொள்ள வேண்டாம்.


ALSO READ: கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR