கொசுத் தொல்லை தாங்கலயா? இவை காரணமாக இருக்கலாம்!!

கொசுக்கள் பொதுவாக அனைவரையும் கடிப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொசுக்கள் தங்கள் இரையைத் தேர்ந்தெடுக்கின்றன. அது நீங்களாகவும் இருக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2020, 03:26 PM IST
  • சில காரணிகளின் அடிப்படையில் கொசுக்கள் தங்களது இரையைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • கர்ப்பிணிப் பெண்கள் கொசுக்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.
  • தோலில் எண்ணைப்பதம் அதிகம் உள்ளவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்க்கிறார்கள்.
கொசுத் தொல்லை தாங்கலயா? இவை காரணமாக இருக்கலாம்!! title=

கொசுக்கள் பொதுவாக அனைவரையும் கடிப்பதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொசுக்கள் (Mosquitoes) தங்கள் இரையைத் தேர்ந்தெடுக்கின்றன. அது நீங்களாகவும் இருக்கலாம். சில காரணிகளின் அடிப்படையில் கொசுக்கள் தங்களது இரையைத் தேர்ந்தெடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. உங்கள் பக்கம் கொசுக்களை கவர்ந்திழுக்கும் சில காரணிகளை நீங்கள் மாற்ற முடியும்!!

கொசுக்கள் ஒரு நபரைத் தேடி கடிக்க வரும் பல காரணிகளை ஆதரிக்கும் ஆதாரங்களை அறிவியல் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வுகள் (Researches) பெரும்பாலும் பல்வேறு வகையான கொசுக்களை உள்ளடக்குகின்றன. அவற்றை உங்களிடம் ஈர்க்கும் விஷயங்கள், கொசுக்களின் இனங்களைப் பொறுத்து மாறுபடும். இந்த ஆய்வுகள் ஒரு சிறிய அளவிலான இடம் மற்றும் மக்களிடையே எடுக்கப்பட்டன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ALSO READ: பிற்பகலில் அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்: ஆய்வு!!

ஜிகா, மலேரியா(Malaria), மஞ்சள் காய்ச்சல், டெங்கு (Dengue), சிக்குன்குனியா போன்ற கொடிய நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன. பின்வரும் விஷயங்களை நினைவில் வைத்து கொசுக்கள் நம்மை நோக்கி வருவதை நாம் ஓர் அளவுக்கேனும் தடுக்கலாம்.

  1. சுவாசிக்கும் போது அதிக கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடும் நபர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும். அனைவரும் மூச்சு விடும் போது கார்பன்-டை-ஆக்சைட் வெளிவரும் என்றாலும், உடல் பருமன் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் வெளிவிடும் மூச்சுக்காற்றில் இது அதிகமாக இருக்கும்.
  2. ‘O’ இரத்த வகை உடையவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்க்கிறார்கள்.
  3. உடற்பயிற்சி செய்த பிறகு உடலில் இருந்து வெளிவரும் வியர்வையில் அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால், அந்த நேரங்களில் கொசுக்கள் உங்கள் அருகில் வந்து உங்களை கடிக்கின்றன.
  4. குடிப்பழக்கம் உள்ளவர்களின் சுவாசக் காற்று மற்றும் வியர்வையில் வெளி வரும் வித்தியாச வாசமும் கொசுக்களை ஈர்க்கின்றன.
  5. ஏதாவது காரணத்தால், தோலில் பல வித பாக்டீரியாக்கள் உள்ளவர்களை கொசுக்கள் அவ்வளவாக கடிப்பதில்லை.
  6. கர்ப்பிணிப் பெண்கள் (Pregnant Women) கொசுக்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். குழந்தைப் பிறப்பில் ஜிகா வைர்சின் பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அம்சம் கண்டறியப்பட்டது.
  7. உடலில் மற்றும் தோலில் எண்ணைப்பதம் அதிகம் உள்ளவர்கள் கொசுக்களை அதிகமாக ஈர்க்கிறார்கள்.

ALSO READ: நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தினம் காலையில் இதை மட்டும் பின்பற்றவும்..!

Trending News