ஜெனீவா: கோவிட் -19 (Coronavirus) தொற்றுநோய்க்கான தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் காத்திருக்கிறது. இதற்கிடையில், அடுத்த 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி (Covid-19 Vaccine) வரும் என்று எதிர் பார்க்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) தெரிவித்துள்ளது. தற்போதைய சோதனைகளில் செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை WHO வலியுறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக சுகாதார அமைப்பின் (WHO) செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் (WHO spokeswoman Margaret Harris), "எந்தவொரு தடுப்பூசி தயாரிக்கும் நாடும் இதுவரை முன்கூட்டியே சோதனைக்கு வரவில்லை. ஆகவே, அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்பு கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது" என்று கூறினார். தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டம் சற்று நீண்டதாக இருக்கும், அதில் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது, கொரோனாவிலிருந்து எவ்வளவு பாதுகாக்க முடியும் என்பதை நாம் காண வேண்டும் என்று அவர் கூறினார். 


WHO செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், இதுவரை எந்தவொரு தடுப்பூசிகளும் குறைந்தது 50% சோதனைகளையாவது பயனுள்ளதாக இருப்பதற்கான "தெளிவான அறிகுறிகளை" கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.


ALSO READ | 


COVID-19 தடுப்பூசியை உருவாக்கவும், விநியோகிக்கவும் WHO உடன் சேர மாட்டேன்: US


உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!


முதல் கொரோனா தடுப்பூசி ரஷ்யா தயாரித்தது: 
WHO அடுத்த ஆண்டு ஒரு கொரோனா தடுப்பூசி பற்றி பேசுகிறது. அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித சோதனைகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ரஷ்யா (Russia) ஒப்புதல் அளித்தது. ஆனால் சில மேற்கத்திய நிபுணர்கள்,  அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


அக்டோபரில் அமெரிக்க தடுப்பூசி எதிர்பார்க்கப்படுகிறது:
அக்டோபர் மாத இறுதிக்குள் ஒரு தடுப்பூசி தயாராக இருக்கக்கூடும் என்று அமெரிக்க பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஃபைசர் இன்க் (Pfizer Inc) தெரிவித்துள்ளது. நவம்பர் 3 ம் தேதி நடைக்கவுள்ள அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னர் தடுப்பூசி குறித்து அறிவிப்பு வெளியாகலாம். அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவாரா? என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியவரும்.