இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.


ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை


இந்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை தொற்று நோயை விட அதிக ஆபத்தை உண்டாக்கும் வெள்ளை பூஞ்சை (White Fungus) தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். இந்த வெள்ளை பூஞ்சை பீகார், பாட்னாவில் நான்கு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


மியூக்கோர்மைகோசிஸ் என்னும் கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. இது நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள், வாய்ப்பகுதி போன்றவற்றை பாதிக்க செய்யும். மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்ட நோயாளிக்கு ஹெச்.ஆர். சி.டி செய்யும் போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வெள்ளை பூஞ்சை நோய் யாரை தாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு வெள்ளை பூஞ்சை நோய் ஆபத்தானது. நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்துக்கு ஸ்டிராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிக்கு எளிதாக உண்டாகலாம். கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் இவர்களுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு உண்டாகிறது. இந்த வெள்ளை பூஞ்சை ஆனது நேரடியாக நுரையீரலை பாதிக்கும். மேலும் வெள்ளை பூஞ்சை குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாதிக்க செய்கிறது.


இந்த நோய்யின் சிகிச்சை முறை
இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க நரம்பு வழியாக மருந்து செலுத்தப்படுகிறது. ஒரு டோஸின் விலை 3500 ரூபாய் வரை என்று கூறப்படுகிறது. இதை எட்டு வாரங்கள் வரை தினசரி பயன்படுத்த வேண்டும். வெள்ளை பூஞ்சை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR