வைணவ மத நம்பிக்கைகளின்படி, ஸ்ரீகிருஷ்ணர் தனது மனைவியான ருக்மிணி தேவியுடன் நிரந்தரமாக தங்கியிருக்கும் இடம் பண்டரிபுரம். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல விஷயங்களும் இடங்களும் பண்டரிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் உள்ளன. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றது பண்டரிபுரம் ஆகும். பண்டரிபுரத்தின் புனித நதியான சந்திரபாகாவில் புனித நீராடி, ஸ்ரீவிட்டலரை தரிசனம் செய்தால் பக்த துக்காராம் பெற்ற பேற்றை நாமும் பெறலாம்.
பெற்றோருக்கு மரியாதை கொடுக்கும் மனிதர்களை விட்டலர் காப்பாற்றுவார் என்பது ஐதீகம். ஆடி மாத ஏகாதசி நாள் விட்டலருக்கு முக்கியமான நாள் ஆகும். தமிழ்நாட்டில் முருகனுக்கு காவடி எடுப்பது போல, விட்டலருக்கு, பால் மற்றும் தயிர் காவடி எடுக்கும் வழக்கம் உண்டு. பாண்டுரங்க விட்டலா! பண்டரிநாதா விட்டலா என்று நாமஜெபம் செய்தால் விஷ்ணுவின் ரூபமான விட்டலரின் அருள் கிடைக்கும்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் அமைந்துள்ள விட்டலரின் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயிலின் மூலவராக அமர்ந்திருக்கிறார் மூலவர் விட்டலர்.
மேலும் படிக்க | சுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றி
பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். விட்டலர் வழிபாடு என்பது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, கர்நாடகம், கோவா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்த இந்துக்களும் பண்டரிநாதனை வணங்குபவர்கள். ஞானேஷ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர், ஜனாபாய், சக்குபாய், சோகாமேளர் என விட்டலர் மீது பல கவிகள் கவி பாடியிருக்கின்றனர். விஷ்ணுவின் மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி, ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் சத்தியபாமா, ருக்மணியாக அவதரித்தனர், இரண்டு பேருக்கும் இங்கு இடம் உண்டு.
விட்டலர் வழிபாடு
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பண்டரிபுரம் சென்று விட்டலரை வணங்கி வழிபடுகின்றனர். ஒடிசாவில் பூரி ஜகன்னாதர் ரத யாத்திரையைப் போலவே, மகாராஷ்டிராவிl பண்டரிபுரத்தில் குடியிருக்கும் விட்டலரை வணங்குகின்றனர். இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த ஆண்டும் வழக்கம்போல, லட்சக்கணக்கான பக்தர்கள் புனித துக்காராம் மற்றும் புனித ஞானோபாவின் காலடிகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக தேஹுவிலிருந்து செல்கின்றனர். இந்த ஊர்வலம் ஆடி மாத ஏகாதசி அன்று பண்டரிபுரத்திற்கு வந்து சேரும். அதன்பிறகு விஷ்ணுவின் யோகநித்திரை தொடங்கும்.
அதன்பிறகு, கார்த்திகை மாத ஏகாதசி அன்று விஷ்ணு பகவான் நித்திரையில் இருந்து எழும்போது தேவுதானி ஏகாதசி அன்று முடிவடையும். இந்த ஆண்டு யாத்திரை ஜூன் 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதம் ஜூலை 16ஆம் தேதி பண்டரிபுரத்தை சென்று சேரும்.
மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
புராணக் கதை
ஆறாம் நூற்றாண்டில் சிறந்த பக்தராக இருந்த ஒருவர், தனது பெற்றோருக்கு செய்யும் சேவையையே மிகப் பெரிய கடமையாக நினைத்து வாழ்ந்து வந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர், மனைவி தேவி ருக்மணியுடன் பக்தரைக் காண வந்தார். அவரிடம் பேச கண்ணபிரான் முயன்றபோது, அப்பாவின் காலை அழுத்திக் கொண்டிருந்த மகன், ஒரு செங்கல்லை எடுத்து போட்டு, இதில் நில்லுங்கள், நான் பெற்றோருக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
கிருஷ்ணரும் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து, கால்களை மடக்கி செங்கலின் மீது நின்றுக் கொண்டார். ஆனால், வந்தவர் பகவான் கிருஷ்ணர் என்று தெரிந்ததும், பதறிவிட்டார். இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக் கோரிய பக்தருக்கு அருளி வரம் தர இறைவன் விளைந்தபோது, ’பாண்டுரங்கனே! நீங்கள் எழுந்தருளிய இந்தத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்களுக்கு அருள் புரிய நீங்கள் இங்கே விட்டலனாக இருக்க வேண்டும்' என்று வரம் கேட்டார்.
பக்தனின் விருப்பத்தை நிறைவேற்ற உள்ளம் கொண்ட இறைவன், பண்டரிபுரத்திலேயே தங்கிவிட்டார். இறைவனின் வரத்தின் படி, பண்டரிபுரத்திற்கு வரும் பக்தர்கள், பீமா நதிக்கரையில் நீராடி விட்டலரை தரிசித்தால், அவர்களின் வாழ்க்கை சிறக்கும்.
விட்டல் இறைவனை வழிபடும் வர்காரி பிரிவு இங்குதான் தோன்றியது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வர்காரிகள் விட்டல்... விட்டல் என இறைவனின் பெயரைக் கோஷமிட்டுக் கொண்டு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். அந்த யாத்திரை காலம் இது தான்.
மேலும் படிக்க | குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ