இளம் வயதில் ஏற்படும் நரை முடியை எவ்வாறு தடுப்பது: அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் ஆரம்ப மற்றும் மோசமான விளைவு முடியில் தோன்றத் தொடங்குகிறது. இதனால் 25 வயதிலேயே நமக்கு வெள்ளை முடி பிரச்சனை ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதனால் இந்த நரை முடியை மறைக்க மக்கள் பல்வேறு ஹேர் டை ப்ராடக்ட்டைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அதில் உள்ள ரசாயனம் முடியை சேதப்படுத்தப் படுத்துமே தவிர வேண்டிய தீர்வை சரியாகத் தராது. இதற்கு நீங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை முடி சாயத்தைப் பயன்படுத்தலாம். இதன் காரணமாக நரை முடியை கருப்பாக்குவது மட்டுமல்லாமல், உங்களின் முடி வலுவாகவும் நீளமாகவும் மாறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளம் வயதில் முடி நரைக்க என்ன காரணம்?
பொதுவாக நம் உடலில் இயற்கையாகவே மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும்.


மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்


இயற்கையான ஹேர் டையை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
நரை முடியைப் போக்க, நெல்லிக்காய் (Indian Gooseberry) மற்றும் ஷிகாக்காயுடன் (Shikakai) இயற்கையான ஹேர் டையை (Natural Hair Dye) நீங்கள் தயார் செய்யலாம். இதற்கு நீங்கள் பின்வரும் பொருள் மற்றும் முறையை சரியாக பின்பற்றினால் போதும்.


இயற்கையான ஹேர் டை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன 
- காய்ந்த நெல்லிக்காய் கைப்பிடி
- 1 சிறிய கிண்ணம் ஷிகாகாய் தூள்
- ஒரு கப் தண்ணீர்


இயற்கை முடி டையை எப்படி தயாரிப்பது
* முதலில் ஒரு இரும்பு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* இதற்குப் பிறகு, இந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் 1 சிறிய கிண்ணம் சீகைக்காய் பொடி சேர்க்கவும்.
* இந்த கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் கேஸை அணைக்கவும்.
* இப்போது இந்தக் கலவையை ஆறவிடவும். பின்னர் தண்ணீர் கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும், மருதாணி பிரஷ் மூலம் தலைமுடிக்கு தடவவும். நீங்கள் நினைத்த கருப்பு முடியால் சுலபமாக பெறலாம்.


நெல்லிக்காய் மற்றும் சீகைக்காய் முடிக்கு எவ்வளவு நன்மை பயக்கும்
நெல்லிக்காயில் (Indian Gooseberry) நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது முடிக்கு உயிர் கொடுக்க வேலை செய்கிறது. இது முடி வேர்களை வலுவாக்குவதன் மூலம் ஊட்டச்சத்து பெற உதவுகிறது. அதே சமயம் தலைமுடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற ஷிகாகாய் (Shikakai) உதவுகிறது.


* நெல்லிக்காய் அதன் மூலிகைப் பண்புகளுக்கு பெயர் பெற்றது. நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது உங்கள் தலைமுடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், முடி உதிர்தலுக்கு காரணமான ஆல்பா-5 ரிடக்டேஸின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் நெல்லிக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.


* ஷிகாக்காய் ஒரு சிறந்த சுத்தப்படுத்தியாகும், இது உங்கள் உச்சந்தலையில் இருந்து இயற்கையான எண்ணெயை அகற்றாமல் எண்ணெயை நீக்குகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பார்மசி அண்ட் ஃபார்மாசூட்டிகல் சயின்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஷிகாக்காயில் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை முடிக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொழுப்பு கரைய.... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ‘சில’ சூப்பர் உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ