ஒவ்வொரு முறையும் நாம் கண்ணாடி முன் நிற்கும் போதெல்லாம், கண்கள் பெரும்பாலும் முடியை நோக்கி தான் செல்லும். நம் அனைவருக்கும் நமது கூந்தல் கருப்பாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் இளவயதிலேயே கூந்தல் வலுவிழந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. இதனால் இளைஞர்கள் தன்னம்பிக்கை மற்றும் சங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த சிக்கலைத் தவிர்க்க, ஒரு சூப்பர் காய்கறி இருக்கிறது. அதை பயன்படுத்தினால் உங்களின் வெள்ளை முடி மிக விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுரைக்காயின் உதவியுடன் முடியை கருப்பாக்கலாம்
உங்கள் தலைமுடி 25 முதல் 30 வயதிலேயே வெள்ளையாக மாற ஆரம்பித்தால், முடிக்கு சாயம் பூசும் தவறை செய்துவீடாதீர்கள், ஏனெனில் ரசாயன அடிப்படையிலான பொருட்கள் பெரும்பாலும் முடியை உலர்த்தும் மற்றும் உயிரற்றதாக மாற்றும், அதற்கு பதிலாக இயற்கை முறை இதற்கு சிறந்த மற்றும் பயனுள்ள வைத்துயமாக்கும். எனவே உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையான பெறுவதற்கு சுரைக்காய் மற்றும் அதன் தோளை நீங்கள் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது


சுரைக்காய் ஜூஸ்
பொதுவாக சுரைக்காயில் வைட்டமின் மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது, அதன் சாற்றை பிரித்தெடுத்த பிறகு குடித்தால், அது உடலை நச்சுத்தன்மையாக்கும் மற்றும் அதன் விளைவு சருமம் மற்றும் முடியிலும் தெரியத் தொடங்கும். எனவே வாரத்தில் 3 நாட்கள் சுரைக்காய் சாறை குடித்து வந்தால், படிப்படியாக அனைத்து வெள்ளை முடிகளும் இயற்கையாகவே கருப்பாக மாறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


சுரைக்காயின் தோல்கள்
பல சமயங்களில் நாம் சமைக்கும் போது சுரைக்காய் தோலை எடுத்து நாம் அதை வீசிவிடுகிறோம். இப்படி செய்வது நாம் அதனுள் இருக்கும் பலன்களை இழக்கிறோம் என்றே கூறலாம். எனவே இந்த தோல்களை அரைத்து அதிலிருந்து சாறு எடுக்கவும். இப்போது இந்த சாற்றின் உதவியுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும், பின்னர் அது உலரும் வரை காத்திருக்கவும். பின்னர் இறுதியாக இதை தண்ணீரில் நன்கு கழுவவும்.


சுரைக்காய் எண்ணெய்
உங்கள் தலைமுடியை கருப்பாக்க, சுரைக்காய் வைத்து எண்ணெய் தயாரிக்கவும், அதை செய்ய தேங்காய் எண்ணெய் தேவைப்படும். முதலில் சுரைக்காய் தோலை வெட்டி வெயிலில் சில நாட்கள் காய வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, பின்னர் காய்ந்த சுரைக்காய் தோலை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தினமும் இரவில் தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் காலையில் எழுந்து தலைமுடியைக் கழுவினால், அதன் பலன் சில நாட்களிலேயே தெரிய தொங்கும்.


மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR