அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

Almonds Side Effects: பாதாம் பருப்பில் கூட பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆம், பாதாம் பருப்பை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது பல வித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 30, 2022, 04:22 PM IST
  • பாதாமின் பக்க விளைவுகள்.
  • மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்.
  • சிறுநீரக கல் வரும் ஆபத்து.
அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது title=

பாதாமின் பக்க விளைவுகள்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாதாம் பருப்பை சரியான அளவில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. 

எனினும், பாதாம் பருப்பை அதிகமாக உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், தேவைக்கு அதிகமாக பாதாமை உட்கொள்வதால், உடல் எடையும் அதிகரிக்கலாம். பாதாம் பருப்பை தேவைக்கு அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாதாம் பருப்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

எடை கூடும்

28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மற்ற தினசரி உணவுகளுடன் பாதாமையும் அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே, நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட் 

மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்

பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் பாதாம் பருப்புகளை அதிகமாக உட்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 

சிறுநீரக கல் வரும் ஆபத்து

பாதாமில் குடலில் கரையும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. உடலில் அதிகப்படியான ஆக்சலேட் இருந்தால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பாதாமை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.

ஒவ்வாமை பிரச்சனை

சிலர் பாதாம் பருப்புகள் அல்லது மற்ற நட்சுகளை உட்கொள்வதால் ஒவ்வாமை ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். உங்களுக்கு நட்சால் ஒவ்வாமை இருந்தால், பாதாம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பாதாம் பருப்பை உட்கொள்வதால் சிலருக்கு ஓரல் அலர்ஜி நோய்க்குறி உருவாகலாம். இதன் காரணமாக, உங்களுக்கு தொண்டை புண், உதடுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News