கொரோனாவின் அடுத்த திரிபு ஒமிக்ரானை விட வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை
கொரோனாவின் அடுத்த மாறுபாடு ஓமிக்ரானை விட அதிக ஆபத்தை கொண்ட தொற்று நோயாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிகிறது.
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு உலகம் முழுவதும் பீதியை கிளப்பி வரும் நிலையில், இந்தியாவிலும் தினமும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸின் அடுத்த மாறுபாடு ஓமிக்ரானை விட மிக வேகமாக பரவும் தொற்று நோயாக இருக்கலாம். இருப்பினும், அடுத்த மாறுபாடு உயிருக்கு ஆபத்தானதா இல்லையா என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தவில்லை.
கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant), இது டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்றாலும், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வேகமாக பரவும் தொற்றுநோயாகக் கூறப்படுகிறது. WHO என்னும் உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 தொடர்பான ஆய்வு பிரிவின் தொழில்நுட்பத் தலைவரான மரியா வான் கெர்கோவ்(Maria van Kerkhove), சமூக ஊடக சேனல்களில் ஒரு நேரடி விவாதத்தில், சுகாதார அமைப்பு கடந்த வாரம் சுமார் 20 மில்லியன் தொற்று பாதிப்புகளை பதிவு செய்துள்ளது என்று கூறினார்.
வேகமாக பரவும் ஓமிக்ரான் மாறுபாட்டின் வாராந்திர தொற்று பாதிப்புகள் புதிய உலகளாவிய சாதனையை படைத்துள்ளன. முந்தைய அனைத்து வகைகளிலும் இது ஆபத்தானது அல்ல என்றாலும், அவை வந்தவுடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
மேலும், கொரோனாவின் அடுத்த மாறுபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று வான் கெர்கோவ் கூறுகிறார். அதன் தொற்று பரவல் வீதம் மிக அதிகமாக இருக்கும் என்கிறார்கள். மறுபுறம், காலப்போக்கில் லேசான, வீரியம் இல்லாத மாறுபாடுகள் உருவாவதோடு, முந்தைய மாறுபாடுகளை விட குறைவாகவே நோய்வாய்ப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி சிறிது நிம்மதி அளித்துள்ளனர்.
ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!
அடுத்த மாறுபாடு இலகுவாக இருக்கும் என்று நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என்று வான் கூறுகிறார். ஆனால் அடுத்த திரிபு வீரியம் இல்லாததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், உண்மையில் இது நடக்கும் என்பதற்கு எந்த உறுதியான தகவலும் உத்தரவாதமும் இல்லை எனவும் Maria van Kerkhove கூறுகிறார்.
ALSO READ | நோய் எதிர்ப்பு சக்தி தரும் Chyawanprash சாப்பிடுவதற்கான சரியான நேரமும், முறையும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR