சர்க்கரை நோய் உள்ளவர்களும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை விஷம் போன்றது. சர்க்கரை அதிகமாக உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். அதிக கலோரி கொண்ட சர்க்கரை அதிகப்படியான ஆற்றலை கொடுக்கிறது. சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை உடல் பயன்படுத்தாதபோது, உடலில் அது கொழுப்பாக சேர்ந்து, உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், குறைந்த கலோரி கொண்ட சக்கரைக்கு மாற்றான பொருட்களை நாடுகின்றனர். இதில் ஒன்று தான் ஸ்டீவியா (Stevia) எனப்படும் இனிப்பு சீனித்துளசி இலை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இனிப்புக்காக சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை இனிப்பில் ஒன்றான, சீனித்துளசி இலை இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 100 முதல் 300 மடங்கு அதிகம் என்பதால், மிக சிறிய அளவில் சேர்த்தாலே போதுமானது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிய, பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வத்ஸ்' என்பவரிடம் பேசினோம்.


ஸ்டீவியா என்னும் சீனித்துளசி 


ஸ்டீவியா என்பது வெள்ளை சர்க்கரையை விட 100 முதல் 300 மடங்கு இனிப்பானது. ஆனால் அதில் கார்போஹைட்ரேட், கலோரிகள் மற்றும் செயற்கை பொருட்கள் இல்லை. ஸ்டீவியா பொதுவாக செயற்கை இனிப்புகளில் காணப்படும் இரசாயனங்கள் மற்றும் சேர்க்கைகள் இல்லாததன் காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. இது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும் மற்ற செயற்கை இனிப்புகளிலிருந்து ஸ்டீவியா வேறுபட்டது. 


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.... உங்களை ஏமாற்றாத டயட் பிளான் இதோ


பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் சீனித் துளசி


தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில், ஸ்டீவியா எனப்படும் சீனித்துளசி இலைகள் காபி - டீக்கு இனிப்பு சேர்க்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்டீவியாவை தூள் மற்றும் திரவ வடிவில் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், சிலர் கலப்படம் செய்யப்பட்ட ஸ்டீவியாவையும் விற்கிறார்கள் என்பதால், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ஸ்டீவியா என்னும் சீனித் துளசி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை


பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறுகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்டீவியா சிறந்த மாற்று தான். ஸ்டீவியாவின் தூய்மையான வடிவம் ஸ்டீவியோசைடு ஆகும். இது பயன்படுத்த பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. துளசியில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருள்கள் தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கும் ஸ்டீவியாவில் மற்ற இனிப்புகளை கலக்கலாம். கலப்பட பொருட்கள் சந்தையில் ஸ்டீவியா என்ற பெயரில் கண்மூடித்தனமாக விற்கப்படுகின்றன. இதில் பேக்கிங் சோடா மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன . எனவே எப்போதும் லேபிளைப் படித்து வாங்கவும். சந்தையில் ஸ்டீவியாவை வாங்குவதற்கு முன், நீங்கள் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ