வெள்ளை அரிசியை தவிர்த்தால் உடல் எடை குறைந்துவிடுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் இருக்கிறது. இது சரியா?
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என எண்ணுவார்கள். அதில் அவர்கள் முதலில் தவிர்க்கும் உணவு வெள்ளை அரிசி. நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், வெள்ளை அரிசியை தவிர்த்தால் மட்டுமே உடல் எடை குறைந்துவிடும் என நினைப்பது தவறு. முறையான உணவு முறை, உடற்பயிற்சி, சரியான நேரத்துக்கு தூக்கம் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அந்தந்த காலநிலைக்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். வெள்ளை அரிசியை பொறுத்தவரை குக்கரில் வைத்து சமைப்பதைக் காட்டிலும், வடித்து சாப்பிடுவது நல்லது. இதனால் உடலில் மாவுச்சத்தை குறைக்க முடியும். அரிசியாக சாப்பிடுவதைக் காட்டிலும், இட்லி, தோசையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
ஒரு பங்கு அரிசி சாதத்துடன் காய்கறி, கீரைகள், பருப்பு ஆகியவற்றை இரண்டு பங்கு சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. அரிசியிலும் சில நன்மைகள் உள்ளன. சோடியம், கொழுப்பு ஆகியவை உடல் எடை அதிகரிப்பு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அவை அரிசியில் மிக குறைவாகவே இருக்கின்றன. அரிசியில் இருக்கும் நார்ச்சத்து கெட்டக் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
மேலும் படிக்க | மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR