Corona Nasal Vaccine: மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி, ஒரு மைல்கல்லாக இருக்குமா..!!!
மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதால், கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அது ஒரு கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என கூறப்படுகிறது
மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதால், கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அது ஒரு கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என கூறப்படுகிறது
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், குழந்தைகளுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுவதால், அது எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின், சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட தகவல்கள் மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி குறித்த இந்த தகவல்கள் நம்பிக்கையை கொடுத்துள்ளன.
தடுப்பூசி பரிசோதனையில், எலிகள் மற்றும் சில சிறிய வகை உயிரினங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில், கொரோனாவிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகள் வெற்றிகரமாக இருந்தாலும், இன்னும் பலருக்கு அதனை எடுத்துக் கொள்வதில் ஏதோ ஒரு தயக்கம் உள்ளது. இந்நிலையில், பயன்படுத்த எளிதான தடுப்பூசி, இந்த தயக்கத்தை போக்கும் எனவும், கொரோனாவை ஒழிக்க இது பேராயுதமாக இருக்கும் என்றும் ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். நாசி தெளிப்பு மனிதர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தினால், கொரோனாவை வெற்றிகரமாக தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
ALSO READ | Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு
மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியதாக உள்ளது என்றும், இன்னும் ஆறு அல்லது எட்டு வாரங்களில் முக்கிய முன்னேற்றம் ஏற்படக் கூடும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் இந்த தடுப்பூசி மிகவும் விலை குறைவானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விலங்குகள் மீதான மருத்துவ பரிசோதனை முடிவுகள் சிறப்பாக வந்துள்ளன.
மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசிக்கு மிகவும் இலகுவாக கிடைக்கும் என்பதோடு, வீரியமாக செயலாற்றக் கூடியதாக இருக்கும் என்பதால், இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
ALSO READ: அச்சுறுத்தும் Zika Virus, அதிகரிக்கிறது எண்ணிக்கை: அறிகுறிகள், சிகிச்சை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR