தொடர்ந்து முதுகுவலியால் அவதிப்பட்ட பெண்ணை பரிசோதித்ததில் மருத்துவருக்கு கிடைத்த அதிர்ச்சி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவை சேர்ந்த ஷாங் என்ற 56 வயதுடைய பெண் ஒருவர் சமீபகாலமாக தொடர் முதுகுவலி மற்றும் காய்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சங்கிஷூவின் வூஜின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். 


அவரை பரிசொதித்தபோதுதான் மருத்துவருக்கு தெரியவந்துள்ளது அந்த பெண்ணின் வலது சிறுநீரகம் முழுவது கற்களால் நிறைந்துள்ளது என்று. அதுவுன் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 3,000 கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 



இதையடுத்து, மருத்துவர்கள் வெற்றிகரமாக சிறுநீரக கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன் பிறகு, கற்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு மட்டுமே சுமார் ஒரு மணி செலவிட்டுள்ளனர். அதில், சுமார் மொத்தம் 2,980 சிறுநீரக கற்கள் இருந்துள்ளது.


இதையடுத்து, அவர் தற்போது பூரண பூரணமடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.