இன்று உலக சாதனைக்காக தயாராகும் 800 kg கிச்சடி
டெல்லியில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை 'உலக உணவு இந்தியா 2017' என்ற கருத்தரங்கம் மத்திய உணவுத் துறை அமைச்சகமும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடக்கும் 'உலக உணவு இந்தியா 2017' என்ற கருத்தரங்கில் உலக சாதனைக்காக 800 கிலோ கிச்சடி செய்யப்பட இருக்கிறது. மிகவும் பெரிய அளவில் நடக்க இருக்கும் இந்த கருத்தரங்கில் பல நாடுகள் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்த உணவு திருவிழாவில் ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பிரதிநிதியாக ஒரு உணவுப் பொருள் சமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உணவுகள் அந்த நாட்டின் தேசிய உணவு ஆகும்.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வில் கிச்சடி சமைக்கப்பட இருக்கிறது. கிச்சடி இந்திய உணவுகளின் பிரதிநிதியாக அங்கு சமைக்கப்பட இருக்கிறது. சஞ்சீவ் கப்பூர் என்ற பிரபல சமையல் நிபுணர் இந்த சாதனையை செய்ய இருக்கிறார்.