இன்று (மே 31) உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் அதிகம் புகைப்பழக்கம் கொண்ட நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 159_வது இடம் கிடைத்துள்ளது. புகைப்பழக்கத்தால் வருடத்திற்கு 7 மில்லியன் பேர் பலியாகிறார்கள். கிட்டத்தட்ட 24 மில்லியன் பேர் 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். அதில் 17 மில்லியன் பேர் ஆண்களும், 7 மில்லியன் பேர் பெண்கள் ஆவார்கள். 


புகையிலை ஒழிப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில், மணல் சிற்பத்தை வரைந்துள்ளார்.


 



 



புகையிலை பற்றி தெரிந்துக்கொள்வோம்!!


ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகை பிடிப்பதனால் புற்றுநோய்க் கூட ஏற்படும். புகை பிடிப்பதால் மூச்சி எடுக்கும், மயக்கம் வரும், இருமல் வரும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏன் மரணம் கூட ஏற்படலாம். 


கார்பன் மோனாக்சைடு உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடளில் ஊனமும் ஏற்படலாம்.


ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 15% பேர் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகிறார்கள்.  உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார். புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும். முடிந்தவரை புகை பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது. புகை பிடிப்பவரின் அருகில் இருந்து விலகி இருக்க வேண்டும். முக்கியமாக இளம் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.