உலக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பல விஷயங்களை நாம் அன்றாட வாழ்க்கையில் செய்து வருகிறோம். மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள் மற்றும் வீட்டிலேயே இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வீட்டு வைத்தியங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் சரியாகத்தான் பின்பற்றுகிறீர்கள் என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்க ஒரு சில உணவுகளும் ஒரு காரணியாகும்.


அந்தவகையில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. அவை.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


1. மது அல்லது புகைத்தல்
எந்த வகையான போதையும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.  இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். ஒருவர் எப்போதும் மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை நீங்கள் வலுவாக வைத்திருக்க விரும்பினால், இன்று இந்த விஷயங்களை உட்கொள்வதை நிறுத்துங்கள்.


 


READ | வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு Oximeter எவ்வளவு அவசியம் என்பதை அறிக


 


2. படுக்கைக்கு முன் காஃபின் நிறைந்த விஷயங்கள் உட்கொள்வது
படுக்கைக்கு முன் தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் ஒருசிலருக்கு உள்ளது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். படுக்கைக்கு முன் காஃபின் உட்கொள்வது தூக்கத்தை தொந்தரவு செய்யலாம் மற்றும் மோசமான தூக்கம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.


3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவு இதில் அடங்கும். ஏறக்குறைய பதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு உணவிலும் நிறைய சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை நிறுத்துங்கள். இதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க முடியும்.


4. சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கலாம். 


 


READ | Immunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!


 


5. பாஸ்ட் புட்


பெரும்பாலான மக்கள் பாஸ்ட் புட் ஐ விரும்புகிறார்கள், ஆனால் இந்த உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். பாஸ்ட் புட் அதிக அளவு கலோரிகள், கொழுப்பு மற்றும் சோடியத்தை வழங்குகின்றன. இந்த உணவுகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. அதற்கு பதிலாக நீங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு பாஸ்ட் புட் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.