நரை முடி பிரச்சனையை தீர்க்கும் நெல்லிகாய்; பயன்படுத்துவது எப்படி..!!
நெல்லிக்காயில், வைட்டமின்-சி, பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகின்றன.
நெல்லிக்காய் பல நூற்றாண்டு காலங்களாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் இருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின்-சி முதல் பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆம்லா என்ப்படும் நெல்லிக்காயில் போதுமான அளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் கூட உணவில் நெல்லிக்காய் சட்னி ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவில் சேர்க்கப்படுகிறது.
உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலை முடி ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் அங்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பயன்படுத்த வேண்டும். நெல்லிக்காய் போலவே நெல்லிக்காய் ஜூஸும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. வெள்ளை முடி பிரச்சனையை தீர்க்க நெல்லிக்காய் ஜுஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!
நெல்லிக்காய் ஜூஸை பயன்படுத்தும் முறை
இப்போதெல்லாம் மாசு மற்றும் மன அழுத்தம் காரணமாக சிறு வயதிலேயே தலைமுடி நரைக்க தொடங்குகிறது. பல நேரங்களில் டை டித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் சிலர் பகக் விளைவை நினைத்து அதை தவிர்க்கவும் விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டு வைத்தியமாக நெல்லிக்காய் சாறை பயன்படுத்தலாம். நெல்லிக்காய் சாற்றில் உங்கள் தலைமுடியைக் கழுவத் தொடங்குங்கள். இதற்கு ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நெல்லிக்காய் சாற்றை தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போடவும். குறைந்தது மூன்று மாதங்களுக்கு இதைச் செய்யுங்கள்.
தற்போது தலைமுடிக்கு எண்ணெய் தடவும் பழக்கமும் குறைந்து வருகிறது. நல்ல முடி ஆரோக்கியத்திற்கு எண்ணெய் தடவுவது அவசியம். எண்ணெயைப் போலவே நெல்லிக்காய் சாற்றையும் கூந்தலில் மசாஜ் செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் ஜூஸை எடுத்துக் கொள்ளவும். பருத்தியினால் அதனை தொட்டு உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு தலையை அலசவும்.
தலை முடிக்கு மருதாணி தடவி வந்தால், அதில் நெல்லிக்காய் சாற்றை கலக்கலாம். மருதாணியில் நெல்லிக்காய் ஜூஸை கலந்து இரவு முழுவதும் அப்படியே விடவும். இது முடியை இயற்கையான கருப்பு நிறத்திற்கு கொண்டு வரவும் இது உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR