நரம்பு கோளாறுகளை குணப்படுத்தும் பழம்! சருமத்தை பளபளக்க செய்யும் அழகுப் பழம்
உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருக்கும் இந்தப் பழம், பல்லுக்கு பலம் கொடுக்கும் விளாம்பழம்
விளாம்பழம் கொடுக்கும் அற்புதமான பலன்களை தெரிந்துக் கொண்டால், எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்படி என்ன இருக்கிறது இந்த விளாம்பழத்தில்? விளாம்பழத்தின் பலன்களை (Fruits for Health) விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
அஜீரண கோளாறைக் குணப்படுத்தும் விளாம்பழத்தில், உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமாக இருக்கின்றன. இவை, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுப்பதோடு, இளநரையைப் போக்கும் என்பதும் உடலுக்கு வலிமை தரும் என்பதும் தெரியுமா?
ALSO READ | கண்ணீரை வர வைத்தாலும் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும் சின்ன வெங்காயம்
சித்த மருத்துவத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது. தினசரி ஒரு பழம் விதம் தொடர்ந்து 21 தினங்களுக்கு விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான தொல்லைகள் அனைத்தும் நீங்கும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
விளாம்பழத்தில் வெல்லம் கலந்து சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, பித்தம், கால்சியம் குறைபாடு, என பல நோய்கள் ஓடிப்போகும். விளாம்பழத்தை முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பளபளக்கும் (Frutis for Beauty). உடல் வறட்சி உள்ளவர்கள் தொடர்ந்து விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் மின்னும்.
விளாம்பழத்தில் விட்டமின் பி12 (Vitamin B12) அதிகம். எனவே, பெண்களுக்கு இது தரும் பலன்கள் அளவிட முடியாதது. மாதவிடாய் கோளாறுகள் குறிப்பாக, அதிக உதிரபோக்கு, வெள்ளைபடுதல் உள்ளவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பிரச்சனைகள் தீரும்.
Also Read | வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா?
உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்ததாக கருதப்படும் விளாம்பழம், ரத்த விருத்திக்கு உதவவதோடு, ரத்தத்தை சுத்திகரிக்கிறது (Blood purification). எனவே, ரத்த சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம்.
தினமும் விளாம்பழத்தைக் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம்பழம் காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவையுடனும். கனிந்து பழமான பிறகு, துவர்ப்பும் புளிப்பும் கலந்த வித்தியாசமான சுவையில் இருக்கும்.
நறுமணம் வீசும் அருமையான விளாம்பழத்தில் 70 சதம் ஈரப்பதம் உண்டு என்பதால், இது எந்த காலத்திலும் உண்ண ஏற்றது. விளாம்பழத்தில் 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.
READ ALSO | பெண்களின் ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறும் லிச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR