Yoga Asanas For Infertility Issues: ஒரு சிலருக்கு கர்ப்பம் தரிப்பது கடினமான காரியமாக இருக்கலாம். இதற்கு பின்னால் மருத்துவ ரீதியாக பல காரணங்களும் இருக்கிறது. அதை கடந்து வருவதற்கு பல மருத்துவ முறைகளும், ஹெல்தியான வாழ்க்கை முறைகளும் இருக்கின்றன. அவற்றுடன் சேர்த்து, சில யோகாசனங்களை செய்தால், கர்ப்பம் தரிக்கும் முறை எளிதாக்கலாம்.  இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 17.9 மில்லியன் பேர், குழந்தையின்மை பிரச்சனையை சந்திப்பதாக கூறப்படுகிறது. கர்ப்பம் தரிக்கும் முறையை எளிதாக்கும் யோகாசனங்கள் எவை என பார்க்கலாமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.சூர்ய நமஸ்காரம்:


>இந்த ஆசனம், மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலியை நீக்கும் ஆசனம், சூர்ய நமஸ்காரம். அது மட்டுமன்றி, மெனாபாஸ் சமயங்களிலும் பெண்களுக்கு உபயோகரமாக இருக்கும் ஆசனம் இது.


>குழந்தை பிறப்பிற்கும் உதவும் ஆசனம் இது. 


>இது, உடலின் பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. பாலியல் சுரப்பிகளின் செயலிழப்பு தொடர்பான உள் குறைபாடுகளையும் இந்த ஆசனம் நீக்குகிறது. 


2.பிரைமரி பிராணாயாமம்:


>இந்த யோகாசனம், மனதளவில் ஒருவரை சாந்தப்படுத்த உதவும்.
>பாலியல் செயல்பாடு சமயங்களில், மனதளவில் தயாராக இல்லை என்றால், கர்ப்பம் தரிக்கும் அளவிற்கு சரியாக செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. இதனை தவிர்க்க, இந்த ஆசனத்தை செய்யலாம். 


3.பஸ்சிமோத்தானாசனம்:


>முதுகு தண்டை சிறப்பாக இயக்க கூடிய யோகாசனங்களுள் ஒன்று, பஸ்சிமோத்தானாசனம். இது, அறிவியல் ரீதியாக குழந்தை பிறப்பிற்கு உதவும் என கூறப்படுகிறது. 


>கருப்பைகள் மற்றும் வயிற்றுப்பகுதியை வலுப்படுத்த இந்த ஆசனம் உதவுகிறது. இது, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. 



4.ஹஸ்தபாதாசனம்:


>இந்த ஆசனம் உடலை எந்த வகையிலும் வளைக்க உதவுகிறது. 


>வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள அழுத்தத்தை குறைக்க, இந்த ஆசனம் உதவுகிறது. 


5.ஜானு ஷிராசனா:


>இந்த ஆசனம், கர்ப்ப காலத்தில் தாய்மார்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
>கணுக்கால்கள் மற்றும் வயிற்றுப்ப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தவும் இந்த ஆசனம் உதவும். 


மேலும் படிக்க | அடி வயிற்று தொப்பையை குறைக்க இந்த ஒரு காய்யை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!


6.பத்தா கோனாசனா:


>இந்த ஆசனத்தை ஆங்கிலத்தில் Butterfly Pose என்று குறிப்பிடுவர். 
>இது, தொடையின் உள்தசை, பிறப்புறுப்பு, இடுப்பு பகுதி மற்றும் முட்டி பகுதி ஆகியவற்றை வலுப்படுத்த உதவும். இந்த பாகங்கள் அனைத்துமே பாலியல் உறவு கொள்ளும் சமயங்களில் உபயோகம் ஆகும். 


கர்ப்பம் தரிக்க யோகாசனம் எப்படி உதவுகிறது? 


மன அழுத்தத்தைக் குறைக்கும்: 


யோகா செய்வது, மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. அதிக பதற்றம் ஹார்மோன் சமநிலையில் மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், இனப்பெருக்க அமைப்பின் செயல்பாட்டைத் தடுக்கிறது என்பதைக் குறிக்கிறது. வழக்கமான யோகா செயலல்களில் ஈடுபடுவது மன அழுத்த அளவைக் குறைப்பதற்கும், கருவுறுதலைச் சாதகமாக பாதிக்கும் அதிக சமநிலையை வளர்ப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


ரத்த ஓட்டத்தை சீர் செய்தல்:


சில யோகாசனங்கள், இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது இனப்பெருக்க உறுப்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால், இனப்பெருக்க அமைப்பு நன்றாக செயல்படும். இந்த யோகாசனங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் போதுமான இரத்த ஓட்டத்தை பெரிதும் நம்பியுள்ளது.


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | நோயற்ற வாழ்வுக்கு... காலை உணவுக்கான சரியான நேரமும்... சரியான உணவுகளும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ