உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் உணவு முறையில் சில மாற்றங்கள் செய்வது வியக்கத்தக்க பலன்களை அளிக்கும். சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. அதனை தயாரிக்க பொதுவாக கோதுமை பயன்படுத்தப்படும் நிலையில்,. கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். கோதுமை மாவில் கார்போஹைட்ரேட் மற்றும் சற்று அதிக கலோரிகள் உள்ளன. ஆனால் சில முழு தானிய மாவு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும், ஏனெனில் அதில் அதிக நார் சத்து இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் பல ஆரோக்கியமான மாவு பற்றி அறிந்து கொள்ளலாம். கீழே குறிப்பிட்டுள்ள மாவுகளில் மாவுச் சத்து இல்லாததால், சாப்பாத்தி செய்வது சிறிது கடினமாக இருக்கும். அதனால், ஆரம்பத்தில், இந்த மாவுகளுடன் சிறிது கோதுமை மாவை சேர்த்துக் கொண்டு செய்வது எளிதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகி மாவு


ராகியின் மேற்புறத் தோலில் உள்ள பாலிஃபினால்களின் அளவு அரிசி, மைதா மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெரும் செறிவுடன் காணப்படுகிறது. ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். நீங்கள் அடிக்கடி உணவை உண்ண வேண்டியதில்லை. இது எளிதில் ஜீரணமாகும். ராகி மாவில் பசையம் இல்லை. உடல் பருமனுக்கு மட்டுமல்லாது சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


அமர்நாத் மாவு


அமர்நாத் மாவு என அழைக்கப்படும் தண்டுக் கீரையின் விதைகளின் மாவு இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அமர்நாத் தானியம் மிக அதிக புரதம் சத்து கொண்டுள்ளது. அமர்நாத், கோதுமையை விட அதிக அளவு புரதம் கொண்டுள்ளது. புரோட்டின் எடை இழப்புக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனுடன், இந்த மாவில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது, இந்த மாவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லிப்பிடுகள் உள்ளன. அமரந்த மாவு ரொட்டிகளை உட்கொள்வதன் மூலம், உடல பருமன் மட்டுமின்றி இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் அமர்நாத் தானியத்தில் 6-10 சதவீதம் அத்தியாவசிய கொழுப்பு அமில எண்னெய்களை கொண்டுள்ளது. மனித உடல்கள் இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிளம்களை தயாரிக்க முடியாது. எனவே நமது உணவில் இருந்து தான் பெற வேண்டும்.


மேலும் படிக்க | ஆர்வ கோளாறுல அதிக விட்டமின் மாத்திரை சாப்பிடாதீங்க.. பேராபத்தை ஏற்படுத்தும்!


தினை மாவு


தினை மாவில் நல்ல அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் சில சத்துக்கள் இருப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியமானது. தினை மாவில் புரதம் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் என்னும் பசையம் இல்லை. இது நீண்ட நேரம் பசி உணர்வே இருக்காது. வயிறு நிறைந்திருப்பதால், உணவு உட்கொள்வது குறைந்து , இதனால் எடை குறையும்.


ஓட்ஸ் மாவு


ஓட்ஸ் எடையை குறைப்பது மட்டும் இன்றி,  இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும். காலையில் ஓட்ஸ் சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். இது மிகவும் விலைஅதிகமானது அல்ல.


குயினோவா மாவு


அரிசி மற்றும் கோதுமை மாவைப் போலவே, குயினோவா மாவும் மெதுவாக பிரபலமடைந்து வருகிறது. குயினோவா மாவில் நிறைய சத்துக்கள் உள்ளன. எனவே இது ஊட்டச்சத்துக்களின் சக்தி இல்லமாகும். குயினோவா மாவு பசையம் இல்லாதது. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இது ஆரோக்கியமற்ற கலோரிகளை அகற்ற உதவுகிறது. இந்த மாவு நம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  இதனால் பசி குறைகிறது. இதனால் நமது எடையை குறைக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ